ஞாயிறு, 10 மே, 2020

குருவே சிவமெனக் கூறினன் நந்தி

"குருவே சிவமெனக் கூறினன் நந்தி
குருவே சிவமென்பது குறித் தோரார்
குருவே சிவனுமாய்க் கோனுமாய் நிற்கும்
குருவே உரையுணர் வற்றதோர் கோவே" பாடல் - 1581

குருவே சிவம் - ஒளி - இறைவன் எனக் கூறினான் நந்தி - நம் தீ!
உலகில் இறைவனைப் பற்றிக் கூறி அடைய வழிகாட்டும் குருவே சிவம்!

சிவத்தின் அருள் பெற்றே சிவத்தைப் பற்றி கூறுவார்!
ஆகையால் மெய்யுரைக்கும் மெய்ப்பொருள் உரைக்கும் குருவே சாட்சாத் சிவமாம்!?
இது புறத்தே!

நம் அகத்தே சிவத்தை கண்டு ஆத்ம ஜோதியை கண்டு மகிழ்ந்தவர்க்கு
அகத்தீயே சிவமே குருவாய்விடும்!

பின் நம் ஆன்மாவாகிய குருவே நமக்கு வழிகாட்ட இறைவனை பரமாத்மனை அடையலாம்!

நந்தி தான் கூறுகிறான் நம்புங்கள்!

நம் குருவை நாமடைய வழிகாட்டும் விழி உணர்த்தும் குரு சிவந்தானே?!

சந்தேகமா?!

குருவே சிவம் என்பதைக் குறித்து ஓர்ந்து உணர்ந்து அறிய வேண்டும்!

அங்ஙனம் ஓராதார் உள்ளத்தும் ஒளியாய் நிற்பவன் சிவனே"!

சிந்திக்க வைத்து சுருதி காட்டி தெளிவைத் தருகிறார் குரு!

அப்படிப்பட்ட குரு தானே நமக்கு கடவுள்! மாதா பிதா குரு தெய்வம் என்பர்?

இதன் உண்மை பொருள் என்ன தெரியுமா? மாதாவும் பிதாவுமாயிருப்பவரே குரு!

அப்படிப்பட்ட குருவே தெய்வம்!? இதை சிந்தித்து தெளிபவனே உண்மை சீடன்!

உண்மை சீடனே சீவனை அறிவான்!

சுட்டிக் காட்டிய குரு சுடர் விழியில் உணர்த்தியதால் அகத்தே
சிவமாய் எவ்வுயிர்க்கும் தலைவனாய் ஒளியாய்
துலங்குவதே மெய்குரு என்பதை உணர்வான்!

காண்பான்!

அந்த குரு மெய்குரு மனோவாக்கு காயத்துக்கு அப்பார்ப்பட்டவர்!

"குரு அருளின்ற திருவருள் உறாது" உலக குரு காட்ட,
உடலுளே மெய்குருவைப் பெற்றே இறைவனை அடையலாம்!

சத்தியம் இதுவே!

ஆன்மீக செம்மல் ஞானசித்தர் ஞானசற்குரு  சிவ செல்வராஜ் அய்யா

MMM - 126

குருவின் திருவடி சரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts