வெள்ளி, 2 டிசம்பர், 2011

குருவிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?

வள்ளலாரிடம் நாம் எப்படி இருக்க வேண்டும்?

கொஞ்சம் விளக்கி சொல்வது என்றால் நாம் குரங்கு குட்டி மாதிரி இருக்க வேண்டுமா அல்லது பூனை குட்டி மாதிரி இருக்க வேண்டுமா

நான் ஒரு போதும் குரங்கு குட்டியாக இருக்க ஆசைபட்டதில்லை. ஏன் எனில் நீங்கள் குரங்கையும், குரங்கு குட்டியையும் பார்த்து இருக்கிறிர்களா

ஆம், குரங்கு மரத்திற்க்கு மரமும், மாடிக்கு மாடி தாவும் போது சிறிது கவனித்து பாருங்கள். அப்படி குரங்கானது தாவும் போது அதன் குட்டியை பாருங்கள்! குட்டிதான் அதன் தாயை கெட்டியாக பிடித்திருக்கும். தாய் குரங்கோ, நம்து குழந்தை (குட்டி குரங்கு) நம்முடன் இருக்கிறது என்ற நினைவே இல்லாமல் அசாத்தியமாக தவ்வி கொண்டிருக்கும். இதை பார்க்கும் போதே எனக்கு மனம் பதறும்… எங்கே குட்டியானது விழுந்து விடுமோ என்று!

ஆனால், நீங்கள் பூனையையும் பூனை குட்டியையும் பார்த்து இருக்கிறீர்களா… பூனை குட்டியானது அமைதியாக மட்டுமே இருக்கும், பூனையின் தாயே அந்த குட்டிக்கு தேவையானதை செய்யும். ஆம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்க்கு செல்ல வேண்டுமானால் தாயே அதை பாதுகாப்பாக வாயால் கவ்வி கொண்டு எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்த்து விடும்.



ஆம், நாம் பூனை குட்டி போல அமைதியாக இருக்க(சும்மா இருக்க) மட்டுமே முயற்ச்சி செய்தால் போதும் மற்றதெல்லாம் நமது குரு நாதர் வள்ளல் பெருமானே தாய் தன்மையுடன் இந்த சமய்த்தில் நாம் இது செய்ய வேண்டும் என்றால் அந்த இடத்தில் நம்மை கொண்டு சென்று விட்டு விடுவார். இந்த இடத்தில் நாம் இருக்க கூடாது என்றாலும் அந்த இடத்தில்ருந்து நீக்கி பாதுகாப்பான இடத்திற்க்கு நம்மை மாற்றி விடுவார்.

மேலும் ஒரு முறை குரங்கு குட்டியானது தாயை பிடித்திருக்கும் பிடியை விட்டு விட்டால் அவ்வளவுதான் அந்த குட்டியை மீண்டும் அந்த தாய் சேர்த்து கொள்ளாது.

ஆனால் பூனை குட்டி வழி மாறி எங்காவது கிடந்தால் கூட அந்த தாய் பூனை மீண்டும் அந்த குட்டியை தேடி வந்து தூக்கி சென்று நல் வழிபடுத்திவிடும்.

ராமலிங்க சுவாமிகளை பிடிப்போம் — சும்மா இருப்போம் — மரணமிலா வாழ்வு பெறுவோம்.


http://www.vallalyaar.com


----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

2 கருத்துகள்:

  1. அன்புள்ள நண்பரே ,
    தாங்கள் கூறிய உவமை சால பொருந்தும்.மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  2. Thriu tamilvirumbi நீங்கள் சாகாகல்வி புத்தகம் படித்தீர்கள? இல்லை என்றால் சொடுக்கவும்

    பதிலளிநீக்கு

Popular Posts