இடக்கைசங்கு சக்கரம், வலக்கைசூலம் மான்மழு;
எடுத்தபாதம் நீள்முடி, எண்திசைக்கும் அப்புறம்,
உடல்கலந்து நின்றமாயம் யாவர்காண வல்லரே?
கழுத்தையும் நிமிர்த்திநல்ல கண்ணையும் விழித்துநீர்
பழுத்துவாய் விழிந்துபோன பாவம் என்னபாவமே?
அழுத்தமான வித்திலே அனாதியான இருப்பதோர்
எழுத்திலா எனழுத்திலோ இருக்கலாம் இருந்துமே.
மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் எண்ணிலாத கோடிதேவர் என்னதுஉன்னது என்னவும் கண்ணிலேகண் மணிஇருக்கக் கண்மறைத்த வாறுபோல் எண்ணில்கோடி தேவரும் இதன்கணால் விழிப்பதே | 78 |
அல்லல்வாசல் ஒன்பதும் அருத்தடைந்த வாசலும் சொல்லும்வாசல் ஓர் ஐந்தும் சொம்மிவிம்மி நின்றதும் நல்லவாச லைத்திறந்து ஞானவாசல் ஊடுபோய் எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லையே. |
காலைமாலை நீரிலே முழுகும்அந்த மூடர்காள்
காலைமாலை நீரிலே கிடந்ததேரை என்பெறும்
காலமே எழுந்திருந்து கண்கள்மூன்றில் ஒன்றினால்
மூலமே நினைப்பிராகில் முத்திசித்தி யாகுமே.
உதிக்கநின்றது எவ்விடம்? ஒடுங்குகின்றது எவ்விடம்?
கதிக்கநின்றது எவ்விடம்? கண்ணுறக்கம் எவ்விடம்?
மதிக்கநின்றது எவ்விடம்? மதிமயக்கம் எவ்விடம்?
விதிக்கவல்ல ஞானிகள், விரிந்துரைக்க வேணுமே.
விழித்தகண் துதிக்கவும் விந்துநாத ஓசையும்,
மேருவும் கடந்தஅண்ட கோளமும் கடந்துபோய்
எழுத்தெலாம் அழிந்துவிட்ட இந்திரசால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை ஈசனே
உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகி
ஒளிர்ந்திடும் ஆன்மாவே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக