சனி, 10 டிசம்பர், 2011

அசைவற்ற உள்ளத்தில் இறைவன்

பகலில் சூரியனது பிரகாசமானது கூகையினது கண்ணிலும், படலம்
பொருந்தி ஒளி மழுங்கியவர்கள் கண்களிலும்,மிருகம் பறவைகளின்
கண்களிலும் ஒரே தன்மையாகபடுகிறது.அப்படி இருந்தும் சூரியனது
ஒளியை கூகையானது காண படமாட்டாது.

படலம் பொருந்திய கண் உடையவர்களும் சூரிய ஒளியையும்
பொருள்களையும் காணமுடிவதில்லை. பார்க்கும் ஒளி உடைய
மனிதர்,மிருகம்,பறவை, அனைத்துமே சூரிய ஒளியையும்
பொருள்களையும் காணக்கூடியதாக இருக்கிறது. இந்த வேறுபாடு
அவர்களிடம் உள்ள வேறுபாடே அன்றி சூரிய ஒளியில் உள்ள
வேறுபாடு அல்ல.

அதுபோல கடவுள் எல்லா ஆன்மாக்களிலும் ஒரே தன்மையாக கலந்து
நின்றாலும் அவைகளின் வேறுபாடான நிலைகளினால் சில அவரை
அறியகூடியதாகவும்,வேறு சில அறியமாட்டாமலும் இருக்கின்றனர்.

அஞ்ஞானமெனும் ஆணவமாகிய இருளெனும் படலம் ஆன்மாவின்
கண்ணைமறைப்பதினால் ஆன்ம கடவுளை அறியமாட்டது. திருஅருட்
சார்புள்ள ஆன்மா சிவஞானமாகிய கண்ணாற் காணும் தகுதியை பெறுகிறது.
ஆன்மா ஒருசெயலை தன் செயலாக நினைத்து செய்தால் அதிலே
அகந்தை மமதை நிகழ்வதால் அது ஆகான்மியம் எனும் கர்மமாகிறது.
உள்ளதினால் ஞானம் காணப் படாதாதலின் அதை அறிதற்கு உள்ளதினால்
முயற்சி செய்வது வீணே!

உள்ளம் அசையாது இருந்தால் ஞானம் வரும். ஆதலினாலே ஞானத்தை
காண்பது ஞான சக்தினால் தான். உலகமயக்கங்கள் எல்லாம் விழி மயக்கம்
என்பர் பட்டினத்தார். தமக்கு அறிவிப்பாரும் அறிய வைப்பாரும்
எல்லாவற்றையும் ஒரு சேர அறிவாரும் ஆகிய ஒருபொருள் பரம்பொருள்.

அதிலே சிந்தையை செலுத்துங்கள் அதிலே அசைவற்று நில்லுங்கள்.
உங்களுக்குள் ஆண்டவனை நிச்சயம் காண்பீர்கள்.

-நெஞ்சுக்கு நிம்மதி தரும் ஆன்மீக சிந்தனைகள் ! ப சு மணியன் அய்யா

3 கருத்துகள்:

  1. நண்பரே,
    தாங்கள் கூறிய அனைத்து ஆன்மீக சிந்தனைகளும் அருமை.தாங்கள்,தங்களிடம் உள்ள ,ஆன்மீக புத்தகங்கள் குறித்து
    வெளியிட்டால் ,அதை என் போன்றோர் ,வாங்கி படித்து பயனுற இன்பமாக இருக்கும்.தங்களின் ,பதிவிற்கு மிக்க நன்றி .

    பதிலளிநீக்கு
  2. Thanks TV.
    எல்லா பதிவின் கடைசியில் புத்தகத்தை குறிப்பிட்டு உள்ளேன்.நீங்கள் கன்னியாகுமரி சென்று சிவசெல்வராஜ் அய்யாவை பார்க்கவும்.
    அய்யா முகவரி தெரிய இந்த பதிவை பாருங்கள்
    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html.

    பதிலளிநீக்கு
  3. ப சு மணியன் அய்யா புத்தகம் வாங்க விஜய பதிப்பகம் கோயம்புத்தூர் அணுகவும்.

    பதிலளிநீக்கு

Popular Posts