திங்கள், 5 டிசம்பர், 2011

ஞான தவம் ஞான தானம்

அரிதான மானிட தேகம் பெற்ற நாம், எக்குறையும் இன்றி மனிதனாக
பிறந்த நாம் ஞானமும் கல்வியும் அறிதல் அரிதினும் அரிதாம்! இந்த
ஞானமும் கல்வியுமே சாகக்கல்வி! சாகா நிலையே ஞானம் பெற்றவர்
பெறுவது.அதை அறியும் கல்வியே சாகாகல்வி.

சாகா நிலை மட்டும் அறிந்தால் மட்டும் போதுமா?
"ஞானமும் கல்வியும் நயந்தகலையும் தானமும் தவமும்
தான் செய்தல் அரிதே" ஆக நல்ல படியாக மனிதராய் பிறந்து
சாகாக்கல்வி கற்ற நாம் செய்ய வேண்டிய முக்கியமான காரியம்
தானம் தவம் செய்தலே.

இந்த உலகில் யாராக இருந்தாலும் சரி தவம் செய்யமால் ஞானம் இல்லை.
தானம் செய்யாமல் ஞானம் கிட்டது ! சத்தியம் ! தவம் செய்பவருக்கு
உண்டான தகுதி தானம் செய்பவராக இருக்க வேண்டும் ! என்பதே!

தானம் கொடுக்க வேண்டும், நாம் வள்ளலாக வேண்டும். தானம் பலவகை!
எல்லாவற்றையும் தானமாக கொடுக்கலாம். தமிழ் கூறும் நல்லுகத்தில் வள்ளல் பலரை நாம் கற்று அறிந்து இருக்கிறோம். ஆன்ம நேய ஒருமைபாட்டிற்க்கு இலக்கணமாய் திகழ்ந்தவர்கள் அந்த வள்ளல் பெருமக்கள்.

புறாவுக்கு சதை கொடுத்த சிபி சக்கரவர்த்தி.
முல்லைக்கொடிக்கு தேர் கொடுத்த பாரி.
மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன்.

வாடிய பயிரை கண்ட போது வாடினர்! வள்ளல் இராமலிங்க சுவாமிகள்.
இப்படி எல்லா ஜீவிகளுக்கும் இறங்கிய கருணை உள்ளமே இறைவன்
வாழும் ஆலயம்.

எதை எல்லாம் தானம் கொடுத்தார்கள்! எப்படி கருணை கடலாக
வாழ்ந்தார்கள்! கர்ணன் வள்ளலுக்கு எல்லாம் வள்ளல்! கர்ணன்
கொடைக்கு ஈடு இணையே கிடையாது. இவர்கள் போலே இல்லா
விட்டாலும் கொடுத்து மகிழும் நல்ல உள்ளதை நாம் பெற்றாக
வேண்டும்.

இரக்கமே எனது உயிர் என்றாரே இராமலிங்க வள்ளலார்! எல்லோரும்
பொருளை தானமாக கொடுத்தார்கள்.ஆனால் வள்ளலாரோ,
எல்லா உயிரும் உயவடையும் வழியை காட்டி,மனிதன் தன்னை உணர
வழி காட்டி அருளினார்.


ஞான தானம் செய்து ஆன்மீக புரட்சியை தொடங்கி வைத்தார்கள்.
இதுவரை இரகசியமாய் இருந்த ஞான பாதை வள்ளல் அருளால் பரசியமகியது!

வெட்ட வெளிச்சம் ஆகியது.

ஞானம் எல்லாரும் பெறலாம். மனித பிறவியே இதற்க்கு தகுதி .
வேறொன்றும் தேவை இல்லை! என அறைகூவல் கொடுத்து
வம்மின் உலகியலிர் மரண மில பெருவாழ்வில் வாழ்ந்திடலாம்.
வாரீர்! வாரீர்! என்று கூவி அழைத்து போதித்தார் ஞானத்தை.
இரகசியங்களை உடைத்தார்.


இன்று அடியேனை ஆட்கொண்டு ரகசியங்களை வெளிப்படுத்தி மெய்ஞான
விளக்கங்களை எல்லோரும் அறிய நூற்களாக எழுதி வெளியிடவும்
அருள் புரிந்து உள்ளார்கள். என்குரு வடலூர் வள்ளல் இராமலிங்கர்
அருளாசியில் அடியேன் ஞான தானம் செய்து வருகிறேன்.

எல்லாருக்கும் ஞான தானம் செய்யுங்கள் உங்களுக்கும் ஞானம் கிட்டும்.

"ஊரன் பிள்ளை ஊட்டி வளர்த்தால் தான் பிள்ளை தானே வளரும்."
ஊரார் ஞானம் பெற நீங்கள் வழி காட்டினால் இறைவன் பரிவு கொண்டு
விரைந்து உங்களை ஆட்கொள்வர்.

இதுவரை "மறை"யாக இருந்த ஞானம் வள்ளலாரால் "திரை" நீக்கப்பட்டு
"உரை"யாக நமக்கு கிட்டியது. என்னே! அவர் தம் கருணை.

சாகாக்கல்வி - சற்குரு சிவசெல்வராஜ்.
பக்கம் - 50



----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

1 கருத்து:

  1. Vaalga Valanmudam.....Om Agatheesaya nama...Om Ramalinga thevaya nama......Arutperumjothi...Arutperumjothi Thaniperum Karunai Arutperumjothi....
    Jeeva Karunaya.....Treating all Souls are Equal....Vanakkam......jeeva.2006@gmail....Nandri......

    பதிலளிநீக்கு

Popular Posts