வியாழன், 29 டிசம்பர், 2011

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

உடலென்ற கூட்டை தூக்கி சுமப்பது யார்?

நாம் படுத்தால் நம்மை தூக்க  நாலு பேர் வேண்டுமே! நாலுபேர் தூக்க சிரமப்படும் உடலை நாமே தூக்கி கொண்டு நடப்பது எப்படி? நோய் வந்து படுக்கையில் படுத்துவிட்டால் கை கால்களை கூட அசைக்க  முடியாதே!

நன்றாக இருக்கும் போது நம்மை நாமே தூக்கி கொண்டு பாரமின்றி
திரிவது எப்படி? நம்முள் இருக்கும் உயிரான  இறைவன் தானே சதா காலமும் நம்மை சுமந்து திரிகிறார்! சுமப்பவனுக்கு கூலிஆகாரம் நைவேத்தியம்! நம்மை சுமப்பவனை பஞ்சமாக பாதகங்கள் செய்து துன்புறுத்தாமல் அடிபணிந்து சும்மா இருந்தாலே அரவணைப்பான்!

மெய்கொண்டு போனாலே மெய்யான பரமனை நம் மெய்யிலே காணலாம்
உணரலாம் மகிழலாம்! இதுவே மெய் !

நான் மெய். என் உடல் மெய். என் பெற்றோர் சொந்த பந்தங்கள்  மெய் தான்.
பலநூறு வருடங்களாக பல ஆயிரம் வருடமாக  பல ஆயிரம் வருடமாக
மன்னர்கள் பலர் ஆட்சி புரிந்தனர். இது சரித்தரம் கூறும் மெய்! நாம் இருக்கும்
பூமி  உருண்டை தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி வருகிறது.
இது விஞ்ஞானம் கூறும் மெய். இப்பிரபஞ்சத்தில் நவ கோள்கள் அவற்றின்
சஞ்சாரங்கள் எல்லாமே உண்மை தானே! யார் இதை எல்லாம் படைத்தது!
நடத்துகிறது ? ஏன் இப்படிஎல்லாம் நடக்கிறது? ஏன் இந்த நாடகம்!
இயற்கையில் நானும் ஒரு அங்கமா? இது எல்லாம் மெய் தானே!
இதை எல்லாம் நம்பும் நான் அறிவது எப்படி? உணர்வது எப்படி?  இந்த
மெய்யை மெய்யாலுமே நம் மெய்யில்  உணர காண முடியுமா?  முடியும்
என்கின்றனர் மெய் ஞானிகள்!! ஆம் தவத்தின் மூலம் உணரலாம்! 


பக்தியில் பலர் உடலை வருத்தி பல சாதனைகள் செய்கின்றனர்!
மனோதிடம் இல்லாத கடினமானவர்கள் செய்யவேண்டியது தான்!
ஆனாலும் இது சரியல்ல! அன்பே வடிவான இறைவனை, கருணை
கடலான கடவுளை, அருள்மயமான ஆண்டவனை அடைய கடின
போக்கு தேவை இல்லை!  அன்பே கடவுள் என்றனர் ஆன்றோர்!
கடவுளை அடைய அன்பு ஒன்றே வழி! மெய்யுனுள் மெய்பொருள்
அன்பால் நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து தவம் செய்வதே சும்மா
இருக்கும் நிலையே ஒப்பற்ற ஞானம்!  மெய்யை வருத்தாது,
மெய்யில் உள்ள மெய்பொருளை மெய்ஞான சற்குரு மூலம்
அறிந்து உணர்ந்து மேன்மை பெறலாம்! இதுவே மெய்!


புத்தகம்

----------------------------------------------------------------------------------------------------------------

தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்?  தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள்  தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.

-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts