திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய உண்மை
நாம் பெரும் புருஷார்த்தம்(உறுதிப் பொருள்)
1 ஏம சித்தி
2 சாகாக்கல்வி
3 தத்துவ நிக்கிரகம் செய்தல்
4 கடவுள் நிலை அறிந்து அம்மய மாதல்
2.மேற்படி புருஷார்த்தங்களை பெறுவதற்கான ஒழுக்கங்கள் யாவை?
1 இந்திரிய ஒழுக்கம்
2 கரண ஒழுக்கம்
3 ஜீவ ஒழுக்கம்
4 ஆன்ம ஒழுக்கம்
உரைநடை பகுதி
நித்திய கரும விதி
தினமும் நம் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள்.
ஞான மூலிகை, உண்ண வேண்டிய உணவுகள், உண்ண கூடாத உணவு,
பற்றி கூறப்பட்டு உள்ளது. உரைநடை பகுதி பக்கம் 250 பார்க்கவும்.
மருத்துவ குறிப்பு
வள்ளலார் ஒரு சித்த மருத்துவர், உரைநடை பகுதி பக்கம் 235 பார்க்கவும்.
பாடல்கள் மூலம் சொன்னவை
1
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம்
உறவுவேண்டும்
௨
மறுமுறைகண்டவாசகம் நல்லோர் மனத்தை நடுங்கச் செய்தேனோ!
3
அவா அறுத்தல்
...
இந்திரிய ஒழுக்கம்
இவற்றில் இந்திரிய ஒழுக்கம், கன்மேந்திரிய ஒழுக்கம் ஞானேந்திரிய ஒழுக்கமென
இருவகைப்பட்டது. கொடிய சொல் செவிபுகாது நாத முதலிய ஸ்தோத்திரங்களைக்
கேட்டல்; அசுத்த பரிசமில்லாது தயாவணமாகப் பரிசித்தல்; குரூரமாகப்
பாராதிருத்தல்; உருசி விரும்பாதிருத்தல்; சுகந்தம் விரும்பாதிருத்தல்;
இன்சொல்லாடல்; பொய் சொல்லாதிருத்தல்; ஜீவஹ’ம்சை நேரிடுங் காலத்தில்
எவ்விதத் தந்திரத்தினாலாவது தடை செய்தல்; பெரியோர்கள் எழுந்தருளி
யிருக்கும் இடங்களுக்குச் செல்லுதல்; ஜீவோபகார நிமித்தமாய் சாதுக்கள்
வாசஸ்தானங்களிலும் வேறு இடங்களிலும் சஞ்சரித்தல்;
நன்முயற்சியிற்கொடுத்தலெடுத்தலாதி
செய்தல்; மலஜல உபாதிகளை அக்கிர மாதிக்கிரம மின்றி கிரமத்தில் நிற்கச்
செய்வித்தல், எவ்விதமெனில், மிதஆகாரத்தாலும் மித போகத்தாலும் செய்வித்தல்,
கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால், ஓஷதி வகைகளாலும் பௌதிக
மூலங்களாலும் சரபேத அஸ்தபரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ த்யான
சங்கற்பத்தாலும் செய்வித்தல், சுக்கிலத்தை அக்கிரம் அதிக்கிரமத்தில் விடாது
நிற்றல் - மந்ததரம், தீவிரதரம் - எவ்வகையிலுஞ் சுக்கிலம் வெளிப்படாமல்
செய்வித்தல்; இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல், இதுபோல் உச்சி
மார்பு முதலிய அங்கங்களையும் மறைத்தல்; சஞ்சரிக்குங் காலத்தில் காலிற்
கவசந்தரித்தல்; அழுக்காடை உடுத்தாதிருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கமாம்.
கரண ஒழுக்கம்
கரண ஒழுக்கமாவது: மனத்தைச் சிற்சபை என்னும் அறிவாகிருதி ஆக்கல்; இதன்
பூர்வத்தில் புருவமத்தியில் நிற்கச்செய்தல். இதன்றி துர்விஷயத்தைப்
பற்றாதிருக்கச் செய்தல்; சீவதோஷம் விசாரியா திருத்தல்;
தன்மதிப்பில்லாதிருத்தல்; இராகாதி நீக்கி இயற்கைச் சத்துவ மயமாதல், தனது
தத்துவங்களை அக்கிரமத்திற் செல்லாது கண்டித்தல்.
ஜீவ ஒழுக்கம்
ஜீவ ஒழுக்கமாவது: ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்களிடத்திலும், ஜாதி,
சமயம், மதம், ஆசிரமம், சூத்திரம், கோத்திரம், குலம், சாஸ்திரசம்பந்தம்,
தேசமார்க்கம், உயர்ந்தோர் தாழ்ந்தோரென்னும் பேதம் நீங்கி, எல்லாரும்
தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுவது.
ஆன்ம ஒழுக்கம்
ஆன்ம
ஒழுக்கமாவது: யானை முதல் எறும்பீறாகத் தோன்றிய ஜீவர்களினது சூக்குமம் தனித்
தலைவன் ஆதலால் - அவ்வச் சீவர்களில் ஜீவான்மாவே திருச்சபையாய் அதனுள்
பரமான்மாவே பதியாய் நிற்பதால் - யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று
எல்லாந் தானாக நிற்றல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக