ஞாயிறு, 18 டிசம்பர், 2011

அந்தகரணங்கள் - புறப்புறம்

பொன்னை மறைத்தது பொன்னணி பூடணம்
பொன்னின் மறைந்தது பொன்னணி பூடணம்
தன்னை மறைத்தது தன கரணங் களாம்
தன்னின் மறைந்தது தன கரணங்களே.

பொன்னால் பல வித நகை செய்து நாம் அணிந்தால்
யாரும் பொன்னை பார்க்க மாட்டார்கள். வளையல்
கம்மல், நெக்லஸ், ஒட்டியாணம் என்று தான் பேசுவார்கள்.
நகைகளை பற்றி தான் பேசுவார்கள்.

மக்கள் பார்ப்பது ஆபரணத்தை! பொற்கொல்லர் பார்ப்பது தங்கத்தை!
பார்ப்பவன் கருத்தில் எல்லாம் உள்ளது. இதுபோல் மரத்தில்
ஒரு யானை பொம்மையை செதுக்கி வைத்தால் பார்ப்பவன் யானை
அழகாக இருக்கிறது என்பான், மரவேலை செய்யும் தச்சன் இது என்ன
மரம் என்பன்!

இதேபோல் சராசரி மனிதனின் அந்தகரணங்கள் மனம் புத்தி சித்தம்
அகங்காரம் மேலோங்கி இருப்பதால் தான் யார் என்பதை அறியமாட்டான்!
குரு மூலம் மெய்பொருள் அறிந்து உணர்ந்து தவம் செய்பவனின்
அந்தகரணங்கள் ஓய்ந்து, தான் ஆகிய ஆத்மா வெளிப்பட்டு நிற்கும்!
ஆத்மாவில் லயமாகிய இருப்பவனின் அந்தகரணங்கள் மறைந்து போகும்!
மோன நிலையிலிருந்து மோனியாவன்! ஞானி ஆவான் !

மந்திர மணி மாலை - 186 சற்குரு சிவசெல்வராஜ்


வள்ளலார் உரைநடை பகுதி

அகம் - ஆன்மா
அகப்புறம் - ஜீவன்
புறம் - கரணம்
புறப்புறம் - இந்திரியங்கள்(
என்கின்ற நாலிடத்திலும் கடவுட் பிரகாச முள்ளது.

1 பிண்டத்தில் அகம் ஆன்மா ஒரு பொருளினது உண்மையைஅறிதல் ஆன்ம அறிவு.

2 பிண்டத்தில் அகப்புறம் ஜீவன், ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை யறிந்த
அறிவே ஜீவ அறிவு.

3 பிண்டத்தில் புறம் கரணம், ஒரு வஸ்துவின் நாமரூபத்தையும் குண
குற்றங்களையும் விசாரித்தறிதல் கரணமாகிய மன அறிவு.

4. பிண்டத்தில் புறப்புறம் கண் முதலிய இந்திரியங்கள், ஒரு பொருளினது
நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக்காணுதல்
இந்திரியக்காட்சி, இந்திரிய அறிவு.

காட்சி மூன்று வகை படும்
1 கரணக்காட்சி
2 ஜீவக்காட்சி
3 ஆன்மக்காட்சி


அண்டத்தில் அகம் அக்கினி
அண்டத்தில் அகப்புறம் சூரியன்
அண்டத்தில் புறம் சந்திரன்
அண்டத்தில் புறப்புறம் நக்ஷத்திரங்கள்

ஆகவே பிண்டத்தில் நாலிடம் அண்டத்தில் நாலிடம்
- ஆக எட்டிடத்திலும் கடவுட் பிரகாசம் காரியத்தாலுள்ளது.


அகமாகிய ஆன்ம பிரகாசமே ஞானசபை, அந்தப் பிரகாசத்துக் குள்ளிருக்கும்
பிரகாசம் கடவுள், அந்த உள்ளொளியின் அசைவு நடம் - இதுதான் ஞானாகாசநடன மென்றும் அசைவுற்றதே நடராஜரென்றும் ஆனந்தநடன
மென்றும் சொல்லுகின்றது.

2 கருத்துகள்:

  1. ஐயா, என் பதிவில் உங்கள் கருத்து கண்டு இந்த தளத்துக்கு வந்தேன். என்னுடைய அண்மைப் பதிவுகளை விட்டுவிட்டு பழைய பதிவுக்குக் கருத்து வெளியிட்டுள்ளீர்கள். தேடலில் என் வழி வேறு. நான் எதையும் எளிதில் நம்புவது இல்லை. நம்புபவரை எள்ளவும் மாட்டேன். என் பழைய பதிவுகளில் என்னை ஆங்காங்கே வெளிப் படுத்தி உள்ளேன். ஒரு உண்மை உங்களிடம் சொல்ல வேண்டும்.I DO NOT FOLLOW ANY DOGMAS. உங்களது மேற்கண்ட இடுகையில் காண்பவைகளில் முதல் மூன்று பாராக்களில் உள்ள கருத்து எனக்கு உடன்பாடே.

    பதிலளிநீக்கு
  2. கருத்துக்கு நன்றி ஐயா!. எந்த நம்பிக்கையும் நம்மை மேம்படுத்தாது. நாம் நம்மை அறிந்தாலே விடிவு.
    அருட்பெரும் ஜோதி அகவல் படலை படியுங்கள். இல்லை என்றால் ஒலி வடிவில் கேட்கவும்.

    பதிலளிநீக்கு

Popular Posts