புதன், 30 நவம்பர், 2011

இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம்.



ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் உள்ளிருந்த விளக்கை திருமாளிகை
புறத்தே வைத்து இதை தடை படாது ஆராதியுங்கள். இந்த கதவை சாத்தி
விட போகின்றோம். இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர்
தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்கள் காலத்தை வீண்
கழிக்காமல்

"ஞான சரியை"

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே
நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு
நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று
வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்
மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே

என்னும் தொடக்கமுடைய ௨௮(28) பாசுரம் அடங்கிய பாடலில் கண்டபடி
தெய்வப் பாவனையை இந்த தீபத்திற் செய்யுங்கள்.
நாம் இப்பொழுது இந்த உடலில் இருக்கிறோம். இனி எல்லா உடம்பிலும்
புகுந்து கொள்வோம். இவ்விடத்தில் எங்கெங்கு சென்றாலும் அங்கங்கும்
இருப்போம். திருத்தி விடுவோம் அஞ்ச வேண்டாம்.

அகவினத்தாருக்கு சாகாவரமும், ஏனையோருக்கு பரிபாக நிலை அளிப்போம்.

சுத்த பிரணவ ஞான தேகத்துடன் வெளிப்படுவோம்.
திருவருட் செங்கோல் ஆட்சி செலுத்துவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts