ஞாயிறு, 28 ஜூலை, 2024

எட்டு எட்டு வருடமாக பிரித்து வைத்தனர்???

 நமது முன்னோர்கள் நம் வாழ்வை எட்டு எட்டு வருடமாக பிரித்து வைத்தனர். 

முதல் எட்டில் இரண்டாம் எட்டில் கல்வி, மூன்றாம் எட்டில் திருமணம், நாலாம் எட்டில் பிள்ளைபேறு, ஐந்தாம் எட்டில் சம்பாத்தியம், இப்படியே 8 எட்டாக நம் வாழ்க்கையை பிரிப்பதற்கு காரணம் எட்டில் தான் நம் உயிர் ஜீவன் ஆத்மா இருப்பதை உணர் வேண்டும் என்பதற்காகத்தான்! இது நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என பல்வாறாக உபதேசித்தார்கள் நாம் அதை எட்டிப் பிடிக்க வேண்டும். 

அது நம் கருத்துக்கு எட்ட வேண்டும் இதுவே வாழ்க்கை. 

எண் எட்டில் - எட்டுஎட்டில் - 64 வயதில் கண்டிப்பாக ஒவ்வொருவரும்  இறை அனுபவத்தில் திழைக்க வேண்டும் என்பதே நம் ஆன்றோர் வாக்கு. அதற்குள் உன் கடமைகளை முடித்துவிடு. 60 வயதுக்கு மேல் இறைவனை உணர தவம் செய்வதைத்தவிர வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது! இதுவே நமது இந்திய கலாச்சாரம். 8, எட்டு என நம் ஞானிகள் எல்லோரும் கூறுவது,  எட்டும் இரண்டும் என கூறுவது, 'எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்"  என ஔவையார் கூறி விளக்குகிறார். 

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் இதையே கூறியிருக்கிறார். 

எண்ணும் 8-ம், 2-ம் தமிழ் எண் அ, உ ஆகும். எழுத்தாகவும் உள்ள அ இரு கண்கள். - உ இரண்டும் இரு கண்கள்.


ஞான சற்குரு  சிவசெல்வராஜ் அய்யா 

www.vallalyaar.com 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts