வெள்ளி, 17 அக்டோபர், 2025

“எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

இறைவன்🔥 மெய்ப்பொருளாக நம் உடலிலே இருப்பதையும் அதை அடைய👁️🔥👁️ கண் ஒளி மூலம் தவம் செய்ய வேண்டும் என்பதையும் எல்லோருக்கும் உரைப்பதே ஞானதானம்!

ஒளவையார் கூறிய, "தானமும் தவமும் தான் செய்தல் அரிதே" என்பது இந்த ஞானத்தை கூறுவதும், மெய்ப்பொருள்👁️🔥👁️உணர்ந்து தவம் செய்வதுமேயாகும்!

இதை தான் வள்ளலார், ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்றார்.

இதையேதான் மகாகவி பாரதியாரும், " அன்னசத்திரம் ஆயிரம் கட்டலைவிட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் நன்று" என்று அழகாக கூறியிருக்கிறார் !

ஒரு அன்னசத்திரம் கட்டி ஆயிரம்பேர்களுக்கு அன்னதானம் கொடுக்கலாம் ! ஆயிரம் அன்னசத்திரம் கட்டினால் பத்துலட்சம் பேர்க்கு அன்னதானம் கொடுக்கலாமல்லவா ?

இது ஒன்றும் பெரிய விஷயமல்ல !? இதைவிட மேலானது என்ன தெரியுமா ?

பல லட்சம் பேர்களுக்கு அன்னதானம் கொடுப்பதை விட ஒருவனுக்கு “எழுத்தறிவித்தல்” உத்தமமான காரியம் !

👁️🔥👁️

எது எழுத்து ? 👁️அ, உ👁️ ஆகிய எட்டும் இரண்டுமே எழுத்து - ஞான எழுத்தாம் ! இந்த ஞான எழுத்தை அறிவிப்பதே, ஞானதானம் செய்வதே அரிதினும் அரிதாம் !

மனிதனாக பிறப்பது,நல்லபடியாக பிறப்பது,
ஞானக்கல்வி அறிவது உணர்வது ஞானதானம் செய்வது

இதை தான் அரிதினும் அரிதாக சொல்கின்றனர் எல்லா ஞானிகளும்! ஞானதானமே, அரிதினும் அரிதான, அதி உன்னதமான தானத்தில் சிறந்த அன்னதானத்தை விடவும் சிறந்தது ஆகும்.

பக்கம் - 71,72

உலக குருவின் திருவடிகளே சரணம்

ஞான சற்குருவின் திருவடிகளே சரணம்







www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts