உள்ளே இருப்பது தான் வரும். கற்பனை எல்லாம் கிடையாது.
பல யுகங்கள்(பல லட்ச வருஷம்) உள்ளது. அதை பற்றி எல்லா தகவலும் நம்முள் உள்ளது.
சித்தர்கள் ஞானிகள் சொல்வது எல்லாம், நடந்தது பற்றி ஒன்றும் கவலை படவேண்டாம்.மறந்து விடு.
இதை ஆராய்ச்சி பண்ண வேண்டாம்.
அதை ஆராய்ச்சி பண்ணினால், அதை பார்க்க ரசிக்க எத்தனையோ வருஷம் வேண்டும்.
'தன்னை உணர்ந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்
பின்னை வினையை பிடித்து பிசைவர்
சென்னியில் வைத்த இறைவன் அருளாலே' -
வினைகளை எப்படி கை ஆழனும் என்று சொல்லி இருக்கிறார்கள். அது ஒன்றுமே நமக்கு வேண்டாம்.
அதை(வினை) இல்லாமல் பண்ண வேண்டும். அதை பற்றி பேசி நினைத்து இந்த ஜென்மமே பாழ் ஆகிவிடும்.
இப்ப நீ தவம் செய்.
அவ்வளவு கர்மத்தையும் தீர். அதை அலசாதே, பார்த்து ரசிக்காதே.
கால விரயம் தான். அதை எல்லாம் நிறுத்து,
புராணத்தில் எவ்வளவோ கதை உள்ளது, ராமர் காலத்தில் மனிதனாக நாயாக ,
சோல்ச்சர் ஆக இருந்து இருப்போம். இப்போ அதை பேசி என்ன பிரயோஜனம்?
நீ யார் என்று பார். உன் உயிர் எங்கு உள்ளது என்று பார்...
அதுவே உன் வாழ்வின் முதல் வேலை.
-ஞானசற்குரு சிவசெல்வராஜ் ஐயா!
💥🔥💥
www.vallalyaar.com
அழகிய விளக்கம்
பதிலளிநீக்கு