ஞாயிறு, 24 நவம்பர், 2024

மனிதன் என்பவன் யார்?

 மனிதன் என்பவன் யார்?

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமாக போற்றுபவன் மனிதன்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்று உணர்ந்து தொழுபவன் மனிதன்.
இணையாக உள்ள திருவடியை அறிந்து சாதனை செய்து வருபவன் மனிதன்.
ஈடில்லா இறைவனை அடைய விடாது தவம் செய்பவனே மனிதன்,
உலக மக்களனைவரையும் தன்னைப்போல் கருதுபவனே மனிதன்.
ஊன்றியிருந்து உள்ளே உறைபவனை தேடுபவனே மனிதன்.
எட்டும் இரண்டும் அறிந்து உணர்ந்து எட்டாமிடம் இருப்பவனே மனிதன்
ஏகாந்தவெளியிலே ஏகாந்தமாய் திரிபவனே, இருப்பவனே மனிதன்.
ஐந்தும் ஒன்றான விந்தையை பார்த்து அதன்கண் இருப்பவனே மனிதன்.
ஒளி ஒன்றே உள்தெளிவார்க்கு என உணர்ந்தவனே மனிதன். ஓங்காரமே உலகாழும் பரம்பொருள் என உரைப்பவனே மனிதன்.
ஒளஷதம் நீயே என இறைவனை சரணடைபவனே மனிதன்.
இப்படி மனிதனை நாம் அடையாளம் காணலாம். மனதை இதம் செய்ய தெரிந்தவனே மனிதன். மனம்போன போக்கில் போகாமல், நல்வழி செல்பவனே மனிதன்.
(அருள்மணி மாலை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts