விவிலியம் சொல்வது என்ன?
கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கு
எவரும் விளக்கை ஏற்றி மரக்காலுக்குள் வைப்பதில்லை மாறாக விளக்குத் தண்டின் மீதே வைப்பர். அப்பொழுதுதான் அது வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளி தரும். இவ்வாறே உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்.
நான் உங்களுக்கு இருளில் சொல்வதை நீங்கள் ஒளியில் கூறுங்கள். காதோடு காதாய்க் கேட்பதை வீட்டின் மேல்தளத்திலிருந்து அறிவியுங்கள்.
அவர் அந்த ஒளி அல்ல மாறாக ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்.
அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.
ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது.
தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவாகள் ஒளியிடம் வருவதில்லை.
உண்மைக்கேற்ப வாழ்பவர் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்.
மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து"உலகின் ஒளி நானே என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார் வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார்" என்றார்.
நான் உலகில் இருக்கும்வரை நானே உலகின் ஒளி" என்றார்.
அனைத்து மனிதரையும் ஒளிர்விக்கும் உண்மையாக ஒளி உலகிற்கு வந்துகொண்டிருந்தது.
ஒளிமயமான பெருநாளாகிய ஆண்டவரின் நாள் வருமுன்ளே கதிரவன் இருண்டு போகும். நிலவோ இரத்த நிறமாக மாறும்.
ஆண்டவரின் தூதர் அங்கு வந்து நின்றார். அறை ஒளிமயமாகியது.
ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
ஏனெனில் ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.
நீங்கள் எல்லாரும் ஒளியைச் சார்ந்தவர்கள்: பகலில் நடப்பவர்கள். நாம் இரவையோ இருளையோ சார்ந்தவரல்ல.
ஏனெனில் ஒருமுறை ஒளியைப் பெற்று, விண்ணகக் கொடையைச் சுவைத்தவர்கள், தூய ஆவியைப் பெற்றவர்கள் ஆவர்.
ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள்.
ஆனால், தற்பொழுது சிறிது காலமாய் எம் கடவுளாம் ஆண்டவருமாகிய உமது கருணை துலங்கியுள்ளது: எங்களுள் சிலரை எஞ்சியோராக விட்டுவைத்தீர்: உமது புனித இடத்தில் எங்களுக்குச் சிறிது இடம் தந்தீர்: எம் கடவுளாகிய நீர் என் கண்களுக்கு ஒளி தந்தீர்: எமது அடிமைத் தனத்திலிருந்து சற்று விடுதலை அளித்தீர்.
ஞானிகளின் கண்கள் ஒளி படைத்தவை: மூடரோ இருளில் நடப்பவர். ஆயினும், ஒருவருக்கு நேர்வதே மற்றெல்லாருக்கும் நேரிடும் என்று நான் கண்டேன்.
ஞானமுள்ளவருக்கு யார் நிகர்? உலகில் காண்பவற்றின் உட்பொருளை வேறு யாரால் அறிய இயலும்? ஞானம் ஒருவன் முகத்தை ஒளிமயமாக்கும்: அதிலுள்ள கடுகடுப்பை நீக்கும்.
கதிரவனும் நிலவும் தங்கள் இருப்பிடத்திலேயே நிலைத்து நிற்கின்றன: பாய்ந்தோடும் உம் அம்புகளின் ஒளியின் முன்னும், பளிச்சிடும் உம் ஈட்டியினுடைய சுடரின் முன்னும் தங்கள் செயல் திறனை இழந்து நிற்கின்றன.
அது ஒரே பகலாயிருக்கும், அதன் வரவை ஆண்டவர் மட்டுமே அறிவார். பகலுக்குப்பின் இரவு வராது. மாலை வேளையிலும் ஒளிபடரும்.
தோபித்து தம் கண்களினால் கடவுளின் ஒளியைக் காணும்பொருட்டு அவருடைய கண்களிலிருந்து வெண்புள்ளிகளை நீக்கவும் ......
--இவை அனைத்தும் விவிலியம் இருந்து எடுத்தது
திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
செவ்வாய், 15 நவம்பர், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Popular Posts
-
காலையில் 1 பொற்றலை கையாந்தகரை அல்லது கரிசிலாங்கண்ணி 2 தூதுளையிலை 3 முசுமுசுக்கையிலை 4 சீரகம் இவைகளின் சூரணம் நல்ல ஜலம்(water), பசுவின் பால...
-
{1} நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு நனைந்துநனைந் தருளமுதே நன்னி...
-
திருவடி என்பது எது? உயிர் எங்கே உள்ளது? உயிரை எப்படி பார்ப்பது? அதை பார்க்க தடை என்ன? தடையை எப்படி தீர்ப்பது? சத்தியஞான சபை என்பத...
-
மெய் ஞானம் என்றால் என்ன? இறைவன் திருவடி எங்கு உள்ளது? ஞானம் பெற வழி என்ன? வினை திரை எங்கு உள்ளது? வினை நம் உடலில் எங்கு உள்ளது? வள்ளல்...
-
Vadalur - Ramalinga adigal( Attained deathless life - final stage in spirituality) 1. Thriuvannamalai - Around giri vala path many jeeva ...
-
எல்லாம் வல்ல இறைவன் எங்கும் நிறைந்த இறைவன் , பேரொளியான இறைவன் நம் உடலில் கண்மணியின் மத்தியில் உள்ள ஊசி முனையளவு துவாரத்தின் உள் ஊசிமுன...
-
thirumandiram புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
1 Bogar 2 Guruswami Location: Guruswami samadhi temple, Near vellala madam, Palani, 3 Chatti swami Location: Chatti swami samadhi temple, Va...
-
சநாதன தர்மம் புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்.
-
கண்மணிமாலை - ஞான நூல் by Thanga Jothi புத்தகம் முழுதாக படிக்க இங்கே தொடர்பு கொள்ளவும். மற்ற நூல்கள் படிக்க இங்கே சொடுக்கவும்...
Good Post!
பதிலளிநீக்குஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...???
பதிலளிநீக்குஒரு கிறிஸ்தவராவது செயல்படுத்துவாரா?
இதை உபதேசித்த இயேசுவாவது செயல்படுத்திக் காட்டினாரா? என்றால் அதுவும் கிடையாது என்று பைபிளே சான்று பகர்கின்றது
----------
மேலும் படிக்க க்ளிக் செய்யுங்கள்.
LINK.
>>>> ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு...??? கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்?
புதிய ஏற்பாடு பைபிள்: யோவான்:18 : 22 – 23. ல்
இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று,
இயேசுவை ஒரு அறை அறைந்தான்..
இயேசு அவனை நோக்கி:
“நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில்,
என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.”
ஒரு போலி மாயையை ஏற்படுத்தி தங்கள் மதத்தைப் பரப்புவதற்காக வேண்டி
“ஓரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டு”
இயேசு இப்படி போதித்தார் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர்.. <<<<<
.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநம் மகான்கள் கூறியதும் யேசு கூறியதும் ஒன்னு தான்.மகான் வழி நடப்போம், வாழ்வில் மேன்மை அடைவோம்.
பதிலளிநீக்குLet follow the path of self realized people. Only they can tell the truth.
(Like going to chemistry teacher to learn chemistry,..)
கொக்கே கொக்கே பூ போடு என்றால் போடாது.
நாம் பூ பொரிக்க முயற்சி எடுக்க வேண்டும்.
Please see this link
http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html
Sir,
பதிலளிநீக்குI am receiving your comments , at my blog. I have no problem in approving it... but u are giving alongwith the Cell phone number. It will give lot of trouble in the future, sometimes to criminal cases also. Please write without phone number, I have no problem. My compliments to your efforts , which are really good for the society.
Please read this post:
http://www.livingextra.com/2011/07/blog-post_2901.html