வியாழன், 18 அக்டோபர், 2018

பத்திரக்காளி - மகாமாயை


"ஆகின்ற சக்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சக்தியின் உள்ளே கதிரெழ
ஆகின்ற சக்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சக்தியின் அத்திசை பத்தே"
............பாடல்−1732


சக்தியின்−இடதுகண் ஒளிபெருகி உள்ளே பதினாறு கலையும் எழ−தவம்

செய்வதால் ஏற்படும் அனுபவம்−வலது கண் ஒளியும் பெருகி சூரிய கலையும் சந்திரகலையும் ஊடுருவிப்பாயும்!

இதையே ஔவையார் குறளிலே "சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் 
ஊடுருவ முக்திக்கு மூலமது" என்று பாடியுள்ளார்!காண்க!

அங்ஙனம் சக்தி பெருகி சக்தி கலையாகிய சந்திர கலையை சிவகலையாகிய 
சூரியகலை ஊடுருவி உள்பாய்ந்து அக்னிகலையில் போய் நிற்கும்!!

சூரிய சந்திர கலைகள் இணைந்து அக்னிகலையில் போய் சேரவும்
மூன்று சுடரும் ஒன்றாகி ஜீவஸ்தானம் ஆத்மஜோதி ஒளிரும்!

அந்த இடத்திலே திசை பத்தையும் ஆள்கின்ற,அண்டமெல்லாம் நிரம்பிய 
சக்தி அமர்ந்து நம்மை காக்கின்றாள்.

எட்டாகிய வலதுகண் இரண்டாகிய இடதுகண் சேர்ந்து உள்ளே பத்தாகிய 
மூன்றாம் கண் திறக்கும்!

பத்து அறையில் வீற்றிருப்பவள் அந்த சக்தி! காளி!

அதனால்தான் பத்திரக்காளி!!பத்தாகிய அறையில் வீற்றிருக்கும் 
காளிதான் "வாலை" மகாகவி காளிதாசனுக்கு அருளிய பத்திரக்காளி!மாகாளி!
மகாமாயை!உலகன்னை!

எங்கும் நிறைந்த அவள் திசை பத்தையும் ஆக்கிரமித்த அவள் குழந்தையாக கன்னியாக கன்னியாகுமரியிலே "வாலை"யாக தவக்கோலத்தில் நின்றருள்கிறாள்!

"ய"−பத்து!கன்னி"ய"குமரி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts