செவ்வாய், 12 ஏப்ரல், 2016

இணையடி, பொற்கழலடி எது தெரியுமா?

திருவருட் பிரகாச வள்ளலார் கூறியதும் திருவள்ளுவர் கூறியதும்
இந்த உலகில் இதுவரை தோன்றிய திருவாளர்கள் கூறியதும்
வேத புராண இதிகாசங்கள் உரைப்பதும் ஒன்றே ஒன்று தான்!
அது தான் ஞான ரகசியம்! வேறொன்றும் இல்லை! பிறவிப்பிணி
தீர திருவடியை பற்ற வேண்டும் என்பதே!

இறைவன் திருவடி, இணையடி, பொற்கழலடி எது தெரியுமா?
எங்கிருக்கிறது தெரியுமா?  மனிதனாகிய நாம் உலகெங்கும்
தேட கூடாது -கஷ்டப்பட கூடாது என்ற கருணை உள்ளத்தோடு
இறைவன் தன்னை சுருக்கிக்கொண்டு ஊசி முனை அளவு
தீயாக - ஜோதியாக நம் உடலில் கண்ணில் மணியில்
மத்தியில் ஊசி முனை துவாரத்துள் துலங்குகிறான்!
அருட்பெருஞ்ஜோதியான இறைவன் நம் கண்மணியில்
ஒளியாக துலங்குகிறார்!

1 கருத்து:

  1. ஐயா , கண்மணி துவாரத்தில் ஒளி இருக்கிறது என்றால், கண் பார்வை இழந்தவர்களின் நிலை என்ன?அவர்கள் ஞானம் அடைய வாய்ப்பில்லையா ?

    பதிலளிநீக்கு

Popular Posts