பீர்முகமதே எந்தன் பீடைகளை ஒழித்தருளே
ஊர்முகமதே மெய்ப்பொருள் ஊர்த்துவ ரேதசருளே
பார்முகமதை எந்நாளும் பாவியேனை காத்தருளே
நூர்முகமதை பற்றியே நூழை புகவருளே
தக்கலை ஞானியின் தண்ணெருள் கிட்டிடுமோ
எக்கலை யும்வாசமே எம்பெருமான் அருளினாலே
அக்கலை நானுணர அல்லாவே அருளுகவே
வக்கிலை வருத்தம் வறுமை போக்கியருளே
முகம்மது வாய்திகழ முன்னிற்குஞ் சோதியே
முகத்துக் குமுகமாய் முக்கோண கோட்டையே
முகத்துக் கண்ணனை முறுக்கி நோக்கியே
முகமது உன்னை முன்னாலே காணுலாமே
அக்கலை நானுணர அல்லாவே அருளுகவே
முகம்மது வாய்திகழ முன்னிற்குஞ் சோதியே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக