வியாழன், 22 அக்டோபர், 2026

திருவடி தீட்சை - அக்னியால் ஞானஸ்நானம்

இயேசுவுக்கு ஞானஸ்நானம் வழங்கிய யோவான், ஜலத்தினாலே தான் வழங்கினார்! அப்போது அவர், "என்னிலும் வல்லவர் வருவார் அவர் அக்னியாலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் வழங்குவார்" என்றுரைத்தார்!? அவர் யார்? இயேசுவே!? அந்த வல்லவர்! இயேசுவே கண்மணியிலுள்ள அக்னியால், அங்கு தவம் செய்து பிராண நீர் ஆவியாகப் பெற்று -அந்த அக்னியாலும் பரிசுத்த ஆவியினாலும் தான் எல்லோருக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்!!

இரண்டு மீன்களையும் 5 அப்பங்களையும் கொண்டு 5 ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் வழங்கினார்! 2 மீன் - 2 கண்கள் 5 அப்பம் ஐந்து புலன் - பொறி - பூதம் ஒத்த இடம் கண்! அதாவது ஜீசஸ் தன் கண்ணால் பார்த்துத்தான் எல்லோருக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்! கண்ணிலுள்ள அக்னியாலும் உள் உள்ள பரிசுத்த ஆவியாலும்தான் அனைவருக்கும் ஞானஸ்நானம் வழங்கினார்.

இயேசு கொடுத்த ஞானஸ்நானமே! வள்ளலார் கொடுத்த திருவடி தீட்சை! காலங்காலமாக இங்கே வழங்கி வருகின்ற சனாதன தர்மநெறி! மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைவனை அடையும் வாழ்க்கை நெறி! இதுவரை இந்த உலகில் தோன்றிய அத்தனை ஞானிகளும் உரைத்த உபதேசம் இதுதான்! ஒன்றுதான்!

 சரீரத்தில் கண்ணில் உள்ள சின்ன ஒளியை, தவத்தால் பெருக்கி, பேரொளியாக்கி, எங்கும் நிறைந்த பரம் பொருளோடு அந்த பேரொளியோடு - தேவனோடு சேரலாம்!

இதுவே
இயேசுவின் உபதேசம்!
அகத்தியரின் உபதேசம்!
முகமது நபியின் உபதேசம்!
வள்ளலாரின் உபதேசம்!

இதுவரை வந்த ஞானிகள் கூறியது இதையே!
இனிவரும் யாரும் இதைத்தான் கூறுவர்!
கூறுவதற்கு வேறு என்ன இருக்கிறது? கடவுளைத் தவிர!!!


நூல் திருவருட் பாமாலை நாலஞ்சாறு

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts