"முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த
அடிகள் உறையும் அறனெறி நாடில்"
ஞானவிளக்கம் :
முடிவும் பிறப்பையும் முன்னே படைத்த -
ஒவ்வொரு மனிதனும் என்று பிறக்க வேண்டும் எப்படி அதன் முடிவு அமைய வேண்டும் என்பதை முன்னரே வகுப்பவன் யாராக இருக்க முடியும் ? எல்லாவற்றையும் நடத்துபவன் இயக்குபவன் தானே இறைவன் ! இதுவே தேவ இரகசியம் !
நாம் என்று ? எங்கு ? யாருக்கு ? பிறக்க வேண்டும் என தீர்மானித்து நம்மை இந்த உலகில் பிறப்பிக்க அருள்பவன் இறைவன் அல்லாமல் வேறு யார் ? அடிகள் உறையும் அறனெறி நாடு -
அடிகள் - திருவடிகள் இறைவனின் திருவடிகள் தான் நம் கண்கள் என பற்பல ஞானிகள் பகர்ந்துள்ளனர். வேதங்களும் அவ்வாறே கூறுகின்றன.
அங்ஙனம் திருவடியாகிய நம் கண்களில் உறையும் ஜோதியை உணர்ந்து தவம் செய்வதே உத்தமம் !
கண்களில் ஜோதி இருப்பதை உணர்ந்து அதை நினைத்து உணர்ந்து நெகிழ நெகிழ தவம் செய்வதே தூய நெறி என அற நெறி என இறைவனை அடைய வழி காட்டும் ஒப்பற்ற வழி நெறி என்று திருமூலரும் தெளிவாக உரைக்கின்றார்.
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக