ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,





திருவடி ரகசியம், இப்போது பரசியம்! வள்ளல் பெருமான் மற்றும் ஞானசற் குரு சிவசெல்வராஜ் அய்யா அவர்கள் கருணையால் திருவடி உபதேசம் மற்றும் தீட்சை. .** புலால் புகை மது கூடாது **
திருவடி உபதேசம் & தீட்சை பெற இங்கு தொடர்பு கொள்ளவும்.
ஞானம் பெற பக்தி வேண்டும்! பரிபூரண நம்பிக்கையுடன்,
மனிதன் என்பவன் யார்?
பிள்ளைச் சிறு விண்ணப்பம்
தடித்தஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால் பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப் பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி ஆற்றேன்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனிதநீ ஆதலால் என்னை அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப் பாஇனி ஆற்றேன்
திருவருட் பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகளின் பாமாலைகள் ஒவ்வொன்றும் ஞான அனுபவமே! இப்பாடல் உலகப்பொருள் இலகுவாக புரிந்துவிடும்! ஞானம்! நாம் நம் கண்மணி ஒளியை எண்ணி தவம் புரியும்போது, தந்தை பற்றிக்கொள்ளும்! தாயாகிய - வலது அதேபோல இடது கண் வீங்கி தடித்தால் வலது கண் அவ்வொளியை உணர்வை உள்வாங்கிக் கொள்ளும்தால் வலது, கருணைக்கடலே எனக்கு தந்தையும் நீ! தாயும் நீ! அம்மையப்பனான நீ எனக்கு உணர்வு மேலீட்டால் துன்பம் வராது சுகமாக இருக்க அருள்புரிவாயாக! என் கண்மணி ஒளியாக ஆடும் அம்பலவாணா வேதனை நீங்கி சுகமாக தவம் நிலவ அருள்புரிவாயாக!
குருவின் திருவடி சரணம்
👁️🔥👁️
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்சோதி
ஞான தவம் செய்வீர்!! ஞான தானம் செய்வீர்!!
இறைவன் திருவடிகளே நம் கண்கள்
சன்மார்க்க தெய்வம்
நம் இந்திய ஞான பூமியில் எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன நாம, ரூப் வித்தியாசமாய் பற்பல கோயில்கள் நிறைந்துள்ளது. பக்தியால் ஞானத்தை காட்டி ஞானத்தால் பரத்தை காட்டும் என்பது முதுமொழி பக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள ஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஐயப்பன்சுவாமியே.
சபரிமலைக்கு செல்ல கடுமையான விரதம் இருக்க வேண்டும். முதலில் மக்களை ஒழுக்கமாக்குகிறது இந்த விரத முறைகள்! தூய பழக்க வழக்கம். எல்லோரையும் ஐயப்பனாகவே பாவிப்பது. எல்லோரும் ஒரே மாதிரி உடை, மாலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.
காலை மாலை இருவேளையும் புனித நீராடி கோயில் சென்றும் வீட்டிலும் இறைவனை பூஜை செய்து வழிபடுவது சுத்த சத்வ சைவ ஆகாரம் கொண்டு வாழ்வது விரத நாட்களில் பிரம்மச்சரியம் கடைபிடிப்பது. இப்படி மனிதனை மனிதனாக்கும் எல்லா நற்பண்புகளும் விரத நாட்களில் அனுஷ்டிக்கப்படுகிறது.
யாராக இருந்தாலும் நடந்துதான் போகவேண்டும் எளிமையாக வாழ வேண்டும் மலை ஏறித்தான் ஆகவேண்டும். தலையிலே இருமுடிப்பபையை சுமந்துதான் ஆக வேண்டும். நெய் தேங்காய் கொண்டு போகணும்.
பண்பு - பணிவு - எளிமை - பக்தி - தொண்டு - அன்பு - இந்த நாட்களிலே வந்துவிடும்
எப்போதும் இருக்க வேண்டும் இப்படி என வலியுறுத்தவே இந்த விரத முறை! எல்லாமே ஞான தத்துவ விளக்கம்! 18 படி ஏறி ஐயப்பன் என்ற ஒரே நினைவோடு வர வேண்டும். அப்போதுதான்காண முடியும்! அங்கே காணப்போவது மகர ஜோதியை! எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண நம்மை நாம் தாயர் படுத்திக்கொள்வதே சபரிமலையாத்திரை.
அதற்கு நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்துவதே விரதம். மனிதன் எப்படி வாழ
வேண்டும்? குருவை பணிந்து அவர் வழிகாட்டுதலில் இறைவனை காண பயணப்படவேண்டும்.
இதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.
குருசாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும், குரு வழிகாட்ட மலை ஏறி ஜோதி ஸ்வருபனை காணலாம்! சகலரையும் ஒன்றாக்கி பார்க்கிறது சபரி மலை! எல்லோரும் ஐயப்பனே! இதுதானே சன்மார்க்கம்! சன்மார்க்கத்தை போதிக்கும் தெய்வமாக சபரிமலை தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமி விளங்குகிறார். அந்த சன்மார்க்க தெய்வ புகழ்பாடி அடியேன் மகிழ்கிறேன். சுவாமியே சரணம் ஐயப்பா!
எல்லாம் வல்ல இறைவன் ஒருவரே!
நாம் எல்லோரும் அவர் பிள்ளைகளே இறைவன் தோதிஸ்வரூபன்!
சரியாக விரதம் இருந்துதான் போகணும்!
சிரமம் பாராது இறைவா என இருக்கணும்!
நல்ல ஆகாரம் நல் ஒழுக்கம் வேணும்!
எல்லோரையும் இறைவனாகவே கருதணும்!
எந்த பேதமும் யாரிடமும் பார்க்கக் கூடாது!
சன்மார்க்கமே சபரிகிரீசன் வழி!
வாழ்க சன்மார்க்க நெறி!
மனிதனாகுக!?
உண்பதும், உறங்குவதும், இனவிருத்தி செய்வதும் மட்டும்தான் மனிதனின் வேலையா மிருகங்களும் இதைத்தானே செய்கிறது!
அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது! என ஒளவையார் கூறியது எதற்காக? அறிய வேண்டாமா? குறையின்றி நல்ல படியாக பிறந்த நாம் பிறவிப்பயனை அடைய வேண்டாமா பிறந்தது சாவதற்கா? வாழ்வதற்கா? பிறந்து செத்து! பிறந்து செத்து! இப்படியே போனால் அறிவு பகுத்தறிவு உள்ளவன் - மனிதன் என்று கூற முடியுமா?
மனிதன் என்பவன் யார்? மனதை இதம் செய்ய - பக்குவப்படுத்த தெரிந்தவனே மனிதன்; அதற்குத்தான் பகுத்தறிவு/ எப்படி பக்குவபடுத்துவது? இதை சொல்லித்தரும் குருவை தேடு| நாம் சாகப்பிறக்கவில்லை! வாழப்பிறந்திருக்கிறோம்! எப்படி வாழ வேண்டும்?
பஞ்சமா பாதகங்கள் பொய் கொலை களவு -கள் -காமம் புரியாது நல்ல பழக்க வழக்கம் ஒழுக்கத்துடன் வாழ வேண்டும். மீன் முட்டை இறைச்சி உணவுகளை உண்ணாதே உடலை கெடுக்காதே.
மது புகை முதலிய போதை பொருட்களை உபயோகிக்காதே நோய்க்கு இடங்கொடேல்.
எல்லா உயிர்களிடமும் அன்பாயிரு!
எப்போதும் உண்மையே பேசு!
ஒருவனுக்கு ஒருத்தி என வாழு!
மண், பெண், பொருள் ஆசையை விடு!
இறைவன் திருவடியில் சரண் புகு! அப்போதுதான் நீ மனிதனாவாய்!!
இறைவன் திருவடியை சரண் அடைவதற்கு! நீ மனிதனாவதற்கு! உன்னையே நீ உணர்வதற்கு ஞானசற்குருவை
சரணம் அடைந்து குரு உபதேசம் பெற்று தீட்சை பெற்று தவம் செய்தால் உனக்குள்ளே மகரஜோதியை காணலாம்.
கண்விழி கட கடவுளை காண்
இறைவன் திருவடிகளே நம் கண்கள்
கன்னியாகுமரி
தங்கஜோதி ஞானசபை அறக்கட்டளை
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்
ஆன்மீக செம்மல் ஞான சற் குரு சிவசெல்வராஜ்
🔥திருவடிப் புகழ்ச்சி - திருஅருட்பா🔥
பரிபவ விமோசனம் குணரகிதம் விசுவம்
பதித்துவ பரோபரீணம்
பஞ்சகிர்த்திய சுத்த கர்த்தத்துவம் தற்
பரம் சிதம்பர விலாசம்
பகர்சுபாவம் புனிதம் அதுலம் அதுலிதமம்
பராஅம்பர நிராலம்பனம்
பரவு சாக்ஷாத்கார நிர் அவயவம் கற்
பனாதீத நிருவி காரம்
பரிபவ விமோசனம் - பரிபவம் + விமோசனம் அவரவர் பரிபக்குவத்திற்கு, வினைக்குதக்கபடி வாழ்வுக்கு தக்கபடி அமையும் நிலையிலின்று மீட்டு விமோசனம் உயர்வு கொடுப்பது நம் கண்மணியே !
குணரகிதம் - குணங்களின் தொடர்பு அற்றது !
விசுவம் - உலகம் !
பதித்துவம் - பதியாய் விளங்கும் தன்மை பெற்றது !
பரோபரீணம் - எண்ணிய உடனேயே உலகெங்கும் செல்லும் ஆற்றல் பெற்றது !
பஞ்சகிர்த்தியம் -படைத்தல் காத்தல் மறைத்தல் அருளல் அழித்தல் என்று இறைவன் தொழில் ஐந்து !
சுத்தகர்த் தத்துவம் - அனைத்தினுக்கும் கர்த்தாவான சுத்தபரம்பொருள் !
தற்பரம் - பரம்பொருளைவிட மேலானது இல்லை !
சிதம்பர விலாசம் - சின்ன இடத்தில் மேடையில் துலங்கி விளங்குவது ! வெளியிலே ஒளி !
பகர்சுபாவம் - தானாக சுயமாக தோன்றி துலங்கும் ஒளி எல்லோரும் சொல்வது !
புனிதம் - பரிசுத்தம் - தூய்மை !
அதுலம் அதுலிதம் - அது - பரம்பொருள் எதோடும் ஒட்டாதது. அது எதற்கும் ஒப்புமாகாது !
அம்பராம்பரம் - ஆகாயத்தையும் தன்னுள் கொண்ட அகண்டவெளி !
நிராலம்பனம் - நிர் + ஆலம்பனம் எவ்வித பற்றும் ஆதாரமும் இல்லாதது ஆனால் எல்லாவற்றிற்கும் ஆதாரமானது !
பரவுசாக்ஷாத்காரம் - சும்மா இருந்தால் சாக்ஷாத் அந்த பரம் பொருளையே நம்முன் எங்குமாய் பரந்து இருப்பதை காணலாம் !
நிர்அவயவம் - நம்போல் உருவம் அவயவங்கள் இல்லாதது ! ஒளிக்காட்சி !
கற்பனாதீதம் - கற்பனைக்கு எட்டாதது !
நிருவிகாரம் - விருப்புவெருப்பு அற்றவன் விகாரம் ஆசை அற்றவன் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
நமது முன்னோர்கள் நம் வாழ்வை எட்டு எட்டு வருடமாக பிரித்து வைத்தனர்.
முதல் எட்டில் இரண்டாம் எட்டில் கல்வி, மூன்றாம் எட்டில் திருமணம், நாலாம் எட்டில் பிள்ளைபேறு, ஐந்தாம் எட்டில் சம்பாத்தியம், இப்படியே 8 எட்டாக நம் வாழ்க்கையை பிரிப்பதற்கு காரணம் எட்டில் தான் நம் உயிர் ஜீவன் ஆத்மா இருப்பதை உணர் வேண்டும் என்பதற்காகத்தான்! இது நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என பல்வாறாக உபதேசித்தார்கள் நாம் அதை எட்டிப் பிடிக்க வேண்டும்.
அது நம் கருத்துக்கு எட்ட வேண்டும் இதுவே வாழ்க்கை.
எண் எட்டில் - எட்டுஎட்டில் - 64 வயதில் கண்டிப்பாக ஒவ்வொருவரும் இறை அனுபவத்தில் திழைக்க வேண்டும் என்பதே நம் ஆன்றோர் வாக்கு. அதற்குள் உன் கடமைகளை முடித்துவிடு. 60 வயதுக்கு மேல் இறைவனை உணர தவம் செய்வதைத்தவிர வேறு எந்த வேலையும் இருக்கக் கூடாது! இதுவே நமது இந்திய கலாச்சாரம். 8, எட்டு என நம் ஞானிகள் எல்லோரும் கூறுவது, எட்டும் இரண்டும் என கூறுவது, 'எண்ணும் எழுத்தும் கண் எனத்தகும்" என ஔவையார் கூறி விளக்குகிறார்.
"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் இதையே கூறியிருக்கிறார்.
எண்ணும் 8-ம், 2-ம் தமிழ் எண் அ, உ ஆகும். எழுத்தாகவும் உள்ள அ இரு கண்கள். - உ இரண்டும் இரு கண்கள்.
ஞான சற்குரு சிவசெல்வராஜ் அய்யா
🔥திருமந்திரம் 1682 - ஞானவிளக்கம்🔥
"தாய்முலையாவது அறியார் தமருளோர்"
நம்மை பெற்றெடுத்த தாய், பிறந்தவுடன் நமக்கு பால் தந்து சீராட்டி அருமையாக வளர்த்தாள் !
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து நம் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி நமக்கு அமுதம் தந்து இறைவனிடம் சேர்ப்பிப்பாள் இறைவி !
உலகத்து உயிர்க்கெல்லாம் தாயே அந்த இறைவி ! வாலை ! தாய் !
அந்த தாய் இருப்பது நம் சிர நடு உள் ! அக்னி கலை - ஜீவஸ்தானம் !
"உச்சிக்கு கீழே அண்ணாக்கின் மேலே," அமுதம் சொட்டும் !
அப்படியானால் அங்கேயும் தமர் - ஓட்டை உள்ளதல்லவா ? அதுவே தாய் மார்பு ! உருவகம் - பரிபாஷை ! மார்பிலிருந்து அமுதம் வரும் !
நாம் நம் இரு கண்மணி ஓட்டை வழியே தவம் செய்து வருங்கால் மணியிலுள்ள ஒளி பெருகி ஓட்டை வழி உள் சென்று ஜீவஸ்தானத்தை அடையும் ! "அந்தக் கரு விந்து நாதம்"! தாய் இருப்பிடம் !
தாய் அமுதூட்டி தந்தையிடம் அனுப்பிவைப்பாள் !
இந்த அமுதம் சாப்பிட்டவர் வினையகன்று மரணமிலாது பேரின்பம் பெறுவர் ! சீரஞ்சீவியாக வாழ்வர் ! பசிதாகம் அற்றுப்போகும் ! காயசித்தி பெறுவர் ! அழியாத உயிரைப் போல உடலும் அழியாத ஒளித்தன்மை பெறுவர்.
தாய்ப் பால் குடித்து வளரும் பிள்ளையே தவராஜ சிங்கமாகும் ! ஞானியாவான் ! சித்தனாவான் !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
#வைகுண்டஏகாதசி : #ஸ்ரீபெரியாழ்வார்