ஞாயிறு, 24 நவம்பர், 2024

🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥



🔥 திருமூலர் கூறும் ஞானம் 🔥

"திருவடியே சிவ மாவது தேரில்
திருவடியே சிவலோகஞ் சிந்திக்கில்
திருவடியே செல் கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளி வார்க்கே"

திருமந்திரம் - 138

இறைவனின் திருவடியே நமது கண்கள் !
சற்குரு உபதேசம் பெற்று தவம் செய்தால் நம் உள்ளம் புரிந்து கொண்டால் நம் கண்களே சிவமாகிய ஒளி உள்ளது என தெளிவாக உணரலாம் ! தேறிட்டாம்பா ! என நம் உறுதியை பார்த்து மற்றவர் கூற வேண்டும் !

திருவடியாகிய நம் கண்களே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்கு நம்மை அழைத்துச் செல்லுமாதலால் அதுவே சிவலோகம் அல்லவா ?

எப்படிபோகும் ? நாம் கண்ணில் மணியில் ஒளியை வைத்து சிந்தித்தால் அல்லவா செல்லும் !
மணியில் மனதை இருத்து !

திருவடியே நமக்கு கதி மோட்சம் தருவதாகும்.
திருவடி மூலமாகத் தானே சிவலோகம் சேரலாம் !
சேர்ந்து சிவ நடனம் காணலாம் ! கண்டால் தானே கதி மோட்சம் !
திருவடியே தஞ்சம் என பரிபூரண சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும் ! அதாவது வினைகளற்று பரிசுத்தமாகும் ! அழுக்காகிய மும் மலம் அகன்று ஆத்மா தெளிவாக துலங்கும் !

▪️எல்லாவற்றுக்கும் தேவை திருவடி !
▪️எல்லாம் பெற தேவை திருவடி !
▪️நாம் நாட வேண்டியது திருவடி !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts