சுத்த மாயை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுத்த மாயை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2019

அசைவிக்கும் சுத்தமாயை+அசுத்தமாயை+பிரகிருதிமாயை


"தகுவிந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு
சக்தி வடிவாம் பொற்பதம்
தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்தி
தஞ்சத்தியாம் பொற்பதம்
சவிகற்பம் நிருவிகற்பம் பெறும் அனந்தமா
சக்தி சத்தாம் பொற்பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருள்
சத்தி உருவாம் பொற்பதம்"



தகுவிந்தை−தகும்+விந்து, தகுதியுடைய உலகபடைப்பின் ஆதாரமான சுத்த மாயையான விந்து சக்தி! ஒளி சக்தி!

மோகினியை−மோகத்தைதரும் மகா மாயையான சக்தி! நாத சக்தி! ஒலி சக்தி!அசுத்த மாயை
மானை மான் போன்ற மனதை−மும்மல காரணமான சக்தியை மாயையை பிரகிருதி மாயை!
அசைவிக்கும் சுத்தமாயை+அசுத்தமாயை+பிரகிருதிமாயை மூன்றையும் சேர்ப்பதே!
ஒரு சக்தி வடிவாம் பொற்பதம்−மும்மாயையும் சேர்ந்த ஒரு சக்தியாக உருப்பெற்றதே நம், திருவடியாகிய கண்கள்!

தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சக்தி−தாழ்வில்லாத குறைவேயில்லாத நிறைவான ஐந்து மூர்த்தங்களான ஈசானம்,தற்புருடம்,அகாரம்,வாமம், சத்தியோசாதம் என்ற ஐந்து சக்திகள்!
தம்சக்தியாம் பொற்பதம்−
இந்த ஐந்தும் சிவனின் பரிணாமங்களாகும்.
மாயை மூன்றும் சக்தி ஐந்தும் சேர்ந்ததே எட்டு! தம் சக்தியாகிய எட்டும் சேர்ந்தாலே திருவடி! சேர்ப்பதே தவம்! சேர்த்தாலே முக்தி

சவிகற்பம் நிருவிகற்பம் −எல்லா பொருட்களும் காணப்படுவையாகவும் அதாவது உருகொண்டும் உரு இல்லாமலும் துலங்குகிறது! பெறும் அனந்தமா சக்தி சத்தாம் பொற்பதம்−உரு அரு எல்லாம் பெறும் எல்லா சக்திகளுக்கும் சத்தாக இருக்கின்றது. பொன்னான திருவடியே!

தடநிருபவவிவர்த்த சாமர்த்திய−உருவ அருவ நிலைப்பாடுகளின் தனித்துவத்தை வெவ்வேறாக காட்டி விளக்கி நிற்கும்தன்மை!

திருவருட் சக்தி உருவாம் பொற்பதம்−இப்படி எல்லாவற்றையும் காட்டி நிற்பது இறைவனின் திருஅருளால் சக்தியால் ஒளி உருவாக அமைந்த நமது பொற்பதம்−திருவடி−கண்களே.

ஆன்மீகச்செம்மல் ஞானச்சித்தர் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை−மூன்றாம் பகுதி
பக்கம்:26−27

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

எந்த அளவுக்கு பக்தி?

நாம் எந்த அளவுக்கு பக்தி காட்டுகிறோமோ அந்த அளவுக்கு தெய்வம் நம்மை  
பற்றியுள்ள பாசமாகிய மாயையை நீக்கி நமக்கு ஞானத்தை கொடுத்தருளும், சத்தியம்.

"குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று"

நாம் செய்த பாவங்களை போக்கி நம் கூடவே இருந்து நம்மை காத்தருளும்.
என் சொந்த வாழ்க்கை அனுபவம். தெய்வமே நேரில் வந்து காட்சி கொடுத்து அருள் புரிந்தது! 
கண்ணியனானேன்! அன்பு என்றால் காதலல்ல! காமமல்ல!
 
காமத்தை வெல்லும் அன்பு. கருணையை தரும் அன்பு. உடலால் ஏற்படுவது அல்ல.
ஆன்மாவால் ஏற்படுவதுதான் அன்பு. ஆன்மாவுக்கு ஆன்மா நேசம் பரிவு காட்டுவது.
மனிதரிடம் மட்டும் ஏற்படுவது அல்ல.
எல்லா உயிரினங்களிடமும் ஏற்படுவது தான் அன்பு.அதற்கு ஈடு ஒன்றுமில்லை.
அன்பு ஏற்பட்டால் வருவது உள்ள நெகிழ்ச்சி. மன மகிழ்ச்சி. பேரானந்தம்.

ஞான சற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா.
நூல்:அருள்மணிமாலை
பக்கம்:53

www.vallalyaar.com

Popular Posts