"தகுவிந்தை மோகினியை மானை அசைவிக்கும் ஒரு
சக்தி வடிவாம் பொற்பதம்
தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சத்தி
தஞ்சத்தியாம் பொற்பதம்
சவிகற்பம் நிருவிகற்பம் பெறும் அனந்தமா
சக்தி சத்தாம் பொற்பதம்
தடநிருப அவிவர்த்த சாமர்த்திய திருவருள்
சத்தி உருவாம் பொற்பதம்"
தகுவிந்தை−தகும்+விந்து, தகுதியுடைய உலகபடைப்பின் ஆதாரமான சுத்த மாயையான விந்து சக்தி! ஒளி சக்தி!
மோகினியை−மோகத்தைதரும் மகா மாயையான சக்தி! நாத சக்தி! ஒலி சக்தி!அசுத்த மாயை
மானை மான் போன்ற மனதை−மும்மல காரணமான சக்தியை மாயையை பிரகிருதி மாயை!
அசைவிக்கும் சுத்தமாயை+அசுத்தமாயை+பிரகிருதிமாயை மூன்றையும் சேர்ப்பதே!
ஒரு சக்தி வடிவாம் பொற்பதம்−மும்மாயையும் சேர்ந்த ஒரு சக்தியாக உருப்பெற்றதே நம், திருவடியாகிய கண்கள்!
தாழ்வில் ஈசானமுதல் மூர்த்திவரை ஐஞ்சக்தி−தாழ்வில்லாத குறைவேயில்லாத நிறைவான ஐந்து மூர்த்தங்களான ஈசானம்,தற்புருடம்,அகாரம்,வாமம், சத்தியோசாதம் என்ற ஐந்து சக்திகள்!
தம்சக்தியாம் பொற்பதம்−இந்த ஐந்தும் சிவனின் பரிணாமங்களாகும்.
மாயை மூன்றும் சக்தி ஐந்தும் சேர்ந்ததே எட்டு! தம் சக்தியாகிய எட்டும் சேர்ந்தாலே திருவடி! சேர்ப்பதே தவம்! சேர்த்தாலே முக்தி
சவிகற்பம் நிருவிகற்பம் −எல்லா பொருட்களும் காணப்படுவையாகவும் அதாவது உருகொண்டும் உரு இல்லாமலும் துலங்குகிறது! பெறும் அனந்தமா சக்தி சத்தாம் பொற்பதம்−உரு அரு எல்லாம் பெறும் எல்லா சக்திகளுக்கும் சத்தாக இருக்கின்றது. பொன்னான திருவடியே!
தடநிருபவவிவர்த்த சாமர்த்திய−உருவ அருவ நிலைப்பாடுகளின் தனித்துவத்தை வெவ்வேறாக காட்டி விளக்கி நிற்கும்தன்மை!
திருவருட் சக்தி உருவாம் பொற்பதம்−இப்படி எல்லாவற்றையும் காட்டி நிற்பது இறைவனின் திருஅருளால் சக்தியால் ஒளி உருவாக அமைந்த நமது பொற்பதம்−திருவடி−கண்களே.
ஆன்மீகச்செம்மல் ஞானச்சித்தர் ஞானசற்குரு திருசிவசெல்வராஜ் அய்யா
நூல்:திருவருட்பாமாலை மெய்ஞானஉரை−மூன்றாம் பகுதி
பக்கம்:26−27
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக