Monday, April 16, 2012

பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யம்

எட்டை எல்லோரும் வெறுப்பர் உலகில். ஆனால் இந்த எட்டு தான் நம்மை ஆள்கிறது.
இன்று அஷ்டமி நல்ல காரியம் செய்ய கூடாது என்கின்றனர். அஷ்டமியில் தானே கண்ணன் பிறந்தான். கண்ணன் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடுகிறோமே!

எட்டாக உள்ள கண்கள் தான் கண்ணன் இருப்பிடம், இதுவே ஞானம்!
 நம் முன்னோர்கள் பலரும் இந்த எட்டை பலபல பரிபாஷையில் பாடி உள்ளனர். இரண்டு பூஜியத்தை தொட்ட படி போட்டால் அது எட்டு. நிமிர்ந்து நின்ற 8 ஐ படுக்க வைத்தால் போல் ! இரண்டு கண்கள் போல் உள்ளது அல்லவா?


 "பூஜ்யத்துகுள்ளே ஒரு ராஜ்யத்தை ஆண்டு கொண்டு புரியாமல் இருப்பன் ஒருவன் அவனை புரிந்து கொண்டால் அவன் தான் இறைவன்" என கவியரசு கண்ணதாசன் பாடியுள்ளார்.

 என்ன ஞானம் பாருங்கள்! பூஜ்ய ஸ்ரீ என்று பெரிய மகான்களை அழைப்பார்கலவா? பூஜ்ய மகிமையை அறிந்தவர் என்று பொருள். நமது உடலில் பூஜ்யம் போலே இருபது கண்மணி தனே! அதன் உள் மத்தியினுள் ஊசி முனை வாசல் உள் ஒரு ராஜ்ஜியம் உண்டு! அதை தானே நாம் அறிய வேண்டும். அந்த ராஜ்ஜியத்தின் ராஜா நம் கண்ணன் தான்! கண் அவன் தான்!


கண் ஒளி தான் அவன்! கண்ணன் வாயை திறந்தான் எல்லா உலகமும் தெரிந்தது என்று தானே பாகவதம் கூறுகிறது.

நம் கண் அடைக்கப்பட்டு உள்ளதல்லவா? அந்த ஊசி முனை திறப்பதை தான் கண்ணன் வாய் திறந்தால் அந்த ராஜ்ஜியம் பூராவும் தெரியும் என்றதாகும்.

இந்த எட்டான இரண்டு கண்ணிலும் வலது கண் 'அ'  என்னும்
தமிழில் முதல் எழுத்து என்றும் தமிழ் எண்ணில் எட்டை(8) குறிக்கும்
என்று இலக்கணம் கூறும்.

'உ' என்பது தமிழ் எண்ணில் இரண்டை குறிப்பதாகும்.  இது இடது கண்ணை
குறிப்பதாகும்.  இதுதான்  பரிபாஷை!

"எண்ணும் எழுத்தும் கண் என தகும்" - இது ஔவையார் வாக்கு.  இதை திருவள்ளுவரும் ஆமோதித்தார்! இப்படி தான்!

"எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண் டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு
"

எண்ணாகவும்  உள்ளது எழுத்தாகவும் உள்ளது - கண்.

எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள ஒரே எழுத்து அ   இது தான், இரண்டு கண் என்று கூறும் வள்ளுவர் வாழும் உயிருக்குத்தான் இது என்றார்.

அதாவது உயிர் வாழ (இறக்காமல் இருக்க)  எண்ணாகவும் எழுத்தாகவும் உள்ள அ, உ என்ற இரண்டும் நம் கண்தான் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

இதை சொல்லி தருபவர் தான் குரு!

உபதேசித்து உணர்த்துபவர் தான் சற்குரு!

எட்டும்  இரண்டும்  அறிவித்தான் என் நந்தி என திருமூலர் கூறுகிறார்!

 இன்றைக்கும் ஊர் பக்கங்களில் சொல்லுவார்கள் கேட்டு இருக்கரீர்களா?

"அ. ன.உ.ன தெரியாத பயலோடு என்ன பேச்சு" என்பார்களல்லவா? நம் முன்னோர்கள்  எட்டாகிய அ இரண்டாகிய உ தெரியாத அறிவிலிகள் அவர்களோடு பேசாதீர் என்று கூறியிருக்கிறார்கள் ! எவ்வளவு பெரிய ஞானத்தை எவ்வளவு எளிமையாக கூறி இருக்கிறார்கள்
பாருங்கள்!?

நம் அறிவுக்கு எட்ட வேண்டும் என்பதற்காகதான் பலப்பல விதத்திலும் பரிபாசையாக கூறியருளினர் எல்லா ஞானிகளும்.

நம் உணர்வுக்கு எட்டவேண்டும் என்பதற்காக குரு உபதேசம் பெறுக தீட்சை பெறுக என வலியுறுத்தினர் ஞானிகள்!

இறைவன் எங்கோ  எட்டாத தூரத்தில் இல்லை! நமக்கு எட்டும் தூரத்தில் எட்டாக இரண்டாக கண்களாக உடலில் இருக்கிறான். அதை எட்டிப்பிடி  உணர்வாலே! ? என்று தான் கூறியருளினார்கள். ஊர் புறங்களில் வீட்டில் பெரியவர்கள் பிள்ளைகளை எங்காவது போய் எதாவது வாங்கி வர செல்ல மகனே "இரண்டு எட்டு போயிட்டு வா"  என்று சொல்லி கேள்வி பட்டு இருக்கிறீர்களா?  

"நான் இரண்டு எட்டு போயிட்டு வரேன்" என சொல்லவும் கேள்வி பட்டு இருகரீர்களா?

எப்படியாவது எட்டின் மகத்துவத்தை மக்கள் அறியவேண்டும் என்பதற்காக
நம் வாழ்வில் ஒவ்வொரு நிலையிலும் இதை மறைமுகமாக பரிபாசையாக
பலவேறு விதமாக கூறியருளினார்கள் ஞான வள்ளல்கள்!

ஞான நூல்கள் - PDF

3 comments:

 1. நம் உணர்வுக்கு எட்டவேண்டும் என்பதற்காக குரு உபதேசம் பெறுக தீட்சை பெறுக என வலியுறுத்தினர் ஞானிகள்!

  ஞானத்தை எட்டும்படி எழுதிய பகிர்வு.. பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. பகிர்வுக்கு பாராட்டுக்கள். எம் குருவின் திருவருள் தங்களின் மீதும் படரட்டும்.! தொடருங்கள்!

  ReplyDelete
 3. ஞானம் பெறுவது குறித்து அமைந்த இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது.
  இறைவனின் பாராட்டுகளுக்கு உரித்தான பதிவு .மிக்க நன்றி .

  ReplyDelete

Popular Posts