மனிதர்களாகிய நாம் வாழ பிறந்தவர்கள். சந்தோஷமாக வாழ வேண்டும். நோய் நொடியின்றி நலமுடன் சிறப்புடன் வாழ வேண்டும். அதுதான் வாழ்க்கை !
ஏழையாக பிறந்தாலும், பணக்காரனாக பிறந்தாலும் எல்லோரும் எங்கும் சுகமாக வாழ சனாதன தர்மம் வழிகாட்டுகிறது.
எப்படியோ ? பிறந்து விட்டோம் !
பிறந்தபின் நாம் வாழ்கின்ற வாழ்வை நெறிப்படுத்தி வாழ்வாங்கு வாழ வேண்டும்.
நமது நாட்டில் வாழ்ந்த ஞானிகள் வாழ்க்கை வரலாறுதான் நமக்கு பாடம். நல்லதை படிக்க வேண்டும், பிடித்துக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஞானியின் நூலுமே நமக்கு ஒவ்வொரு பாடந்தான் ! பொக்கிஷந்தான்.
“என் வாழ்க்கையே என் செய்தி" என மிக அழகாக ஒரு ஞானி கூறியிருக்கிறார்.
பெரியபுராணம் 63 நாயன்மார் வரலாறை கூறும் நூல்.
நன்றாக சிந்தித்து பாருங்கள். நமது நாட்டில் இறைவன் அடியார்கள் மொத்தம் 63 பேர்கள் தானா ?
தூய்மையான, ஒப்பற்ற, உன்னதமான இறையடியார்கள் நம் நாட்டில் லட்சோபலட்சம் பேர்கள் !
சேக்கிழார் ஏன் 63 பேரை மட்டும் எடுத்துக்கொண்டார் ?
பெரியபுராணத்தில் வரும் 63 பேரும் பற்பல ஜாதிகளில் பிறந்தவர்கள். பற்பல தொழில் செய்தவர்கள். பற்பல நிலைகளில் இருந்தவர்கள். இறைவனை அடைவதில் மட்டும் அனைவரும் ஒரே ரகம். தீவிர பக்தி அன்பு ஒழுக்கம் நெறிப்படி வாழ்ந்தார்கள்.
"எத்தொழிலை செய்தாலும் ஏதவஸ்தைபட்டாலும் முத்தர் மனம் இருக்கும் மோனத்தே" என்ற சித்தர் வாக்கு பரிபூரணமான முழு உண்மை.
இதுதான் நமக்கு பாடம் ! படிப்பினை ! நீ எந்த நிலையில் இருந்தாலும் சரி, இறைவன் உன்னை காத்தருள்வார் என பறைசாற்றுகிறது. இப்படியேதான் நம் புராணங்கள் எல்லாம்.
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக