ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥



நூல் : சநாதனதர்மம் 3

🔥 ஞானிகள் கண்டறிந்த உண்மை ?🔥

இந்த உலகில் பிறக்கும் நாம் அனைவரும் மனிதன் என்ற நிலையில் ஒரு குலம்.
ஆனால் 700 கோடி மக்கள் உள்ள இந்த உலகில் குணத்தால் 700 கோடி விதமாக இருக்கிறோம்.
உடல் ஒரே மாதிரிதான் !
உயிர் எல்லோருக்கும் ஒன்றுதான் !

பின் ஏன் இந்த வேறுபாடு ? எதனால் ? எப்படி ?
இதற்கு விடை இந்திய ஞானிகள் கூறுகிறார்கள்.

ஒரு மனிதன் பிறக்கிறது, அவன் இந்த பெற்றோருக்கு பிறப்பது இந்த ஊரில், இந்த சூழலில் என எல்லாம் நிர்ணயிக்கிறது ஒரு சக்தி !

ஒவ்வொருவரும் செய்த பாவ புண்ணிய வினைகளுக்கு தக்கபடி பிறவி அமைகிறது.
பிறப்பை தீர்மானிக்கின்ற அந்த மாபெரும் ஒப்பற்ற சக்தியே உயிரை கொடுக்கின்றது !
பிறப்புக்கு காரணம் கர்மவினை !
எத்தனை பிறவி எடுத்தோமோ ?
எவ்வளவு பாவ, புண்ணியம் செய்தோமோ ?

இதை அறிய, பிறப்பைப் பற்றி நாம் அறிய, பிறப்புக்கு காரணமான வினையோடு உயிரை கொடுத்த இறைவனிடம் கேட்க வேண்டும்.

வினைகளோடுதான் பிறப்பு !?
வினைக்கு தகுந்தபடிதான் பிறப்பு !
யாருமே இதற்கு விதிவிலக்கல்ல !


" வினைபோகமே ஒரு தேகங்கண்டாய்
தினை போதும் நில்லென்றால் நில்லாய்"
என ஞானிகள் அழகாக கூறியிருக்கிறார்கள்.

பிறக்கும்போது நாம் கொண்டு வருவது நாம் முற்பிறவிகளில் செய்த கர்மத்தில் ஒரு பகுதியே !


1. பிறப்பில் வரும் கர்மம் பிராப்தம் - பிராரத்துவம் என்பதாகும்.
2. பிறந்து நாம் செய்வது ஆகாமியம் !
3. பிறப்பில் வந்த பிராரத்துவம் போக மீதி இருப்பதே சஞ்சித கர்மம் !
ஆக மூன்றுவிதம்.

இந்த கர்ம வினைகளில் பிராரத்துவமே எல்லா பிறப்பிலும் எல்லோருக்கும் வருவது.

அதாவது நாம் பல பிறவிகளில் செய்த பாவம் கொஞ்சம், புண்ணியம் கொஞ்சம் இரண்டையும் சேர்த்து இறைவன் நாம் பிறக்கும்போது உயிரோடு இணைத்து, சூட்சும நிலையில் வைத்து பிறப்பிக்க வைக்கிறார்.


உயிர் பிண்டத்தில் வரும்போது தான் கர்மவினையும் கூடவே வருகிறது.
பிண்ட உற்பத்தியில் முதன் முதலாக உருவாகும் உறுப்பில்தான் உயிர் சேர்கிறது !
இதுவே ஞானிகள் கண்டறிந்த உண்மை !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் மலரடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts