நூல் : சநாதனதர்மம் 10
🔥 மரணம் எப்படி இருக்கும் ?! 🔥
மரணம் எப்படி இருக்கும் ?!
மயக்கம் - தூக்கம் - மரணம் என மூன்றுநிலை உள்ளது.
மயக்கம் என்பது நம் உணர்வு பிசகும் நிலை. உயிர் நிலை கொள்ளாமல் தடுமாறுவதே மயக்கம், மிகக்குறுகிய காலம் உணர்வு இல்லாமல் போவது.
தூக்கம் - நம் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு கொடுக்கும் நேரம். உயிர் நிலைகொள்ளும் நேரம், ஒடுங்கும்நேரம், நடு உடலில் ஒடுங்கும். மிகக் குறைந்த அளவில் உணர்வு இருக்கும்.
மரணம் என்பது உயிர் உடலில் இருக்க முடியாமல் உடலை விட்டு வெளியேறுதல்.
மரணம் நம் கையில் !? தடுக்கலாம் !?
மரணம் வர காரணமான ஆகாமிய கர்மம் பாதிக்காத தன்மை பெறவேண்டும். உடலை விட்டு உயிர் பிரியாமல் மிக மிக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடலில் உயிரை இறைவன் எங்கு பத்திரமாக வைத்திருக்கிறானோ ?! அங்கேயே அதை பத்திரபடுத்துவது தான் புத்திசாலித்தனம் !
அது அங்கேயே இருக்கச்செய்து விட்டால் அதுதான் ஞான சாதனை ! தவம் !
பிறந்தது இறப்பதற்கல்ல !
இறப்பை வெல்வதற்கு ! அதுவே ஞானம்.
இதை உரைத்ததுவே சனாதனதர்மம். எல்லா மனிதர்களும் மரணம் வராமல் தடுக்க பாடுபட வேண்டும்.
"தூங்கி விழிக்க மறந்தவன்" என இறந்தவனை வள்ளலார் குறிப்பிடுகின்றார்.
இன்றைய உலகில் மனிதன் சாப்பாடு சாப்பாடு என அலைகிறான்.
சாப்பிடத்தான் வாழ்கிறான் அதற்குத்தான் உழைக்கிறான் பணம் சேர்க்கிறான்.
ஒவ்வொரு மனிதனும் தெரிந்தோ தெரியாமலோ சாப்பாட்டுக்காகவே வாழ்கிறான் !
பிறந்ததே சாப்பாடுக்காகத் தான்!
சாப்பாடு அல்ல !
சாவுக்கான பாடு சா-பாடு !?
சாவதற்காக படாத பாடுபடுகிறான்.
எப்படியோ சாகிறான் !
சாகக்கூடாது என்பதே சித்தர்கள் உபதேசம் !
சாகாதவனே சன்மார்க்கி !
இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!
வள்ளல்பெருமான் திருவடிகள் போற்றி !!
- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா
www.vallalyaar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக