திங்கள், 26 டிசம்பர், 2022

🔥 மெய் அனுபவம் பெற வேண்டுமா ? 🔥

சாகாக்கல்வி நூலிலிருந்து : 41


நமது மெய் சூடாக இருக்கிறதல்லவா ? ஏன் ?


பேரொளியான இறைவன் சிற்றொளியாகி நம் உயிராகி நம் உடலினுள் இருப்பதால்தான் !

சராசரி மனிதனின் உயிர் உஷ்ணம் ஒரே சீராக இருக்க வேண்டும் !
கூடினால் ஜுரம் குறைந்தால் ஜன்னி காலனை பார்க்க போய்விட வேண்டியதுதான் !

உயிரின் தன்மை உஷ்ணம் தான், சூடு தான் ஒளிதான் என்பதை இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.

உயிர் இருக்கின்ற நம் உடல் சூடாக இருக்கிறது.
உயிர் போன உடல் குளிர்ந்து போய் விடுகிறதல்லவா ?
உயிர் இருந்தால் சூடு இருக்கிறது. அப்படியானால் உயிரின் தன்மை சூடு தானே ! உயிர் ஒளி தானே !

மெய்ப்பொருளில் கண்மணியில் ஒளி இருக்கிறது, உயிர் துலங்குகிறது என்பது மெய்யே !

" சூடு கொண்ட திருவாவடுதுறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே "
என துறையறி விளக்கத்தில் அகஸ்திய மாமுனிவர் கூறியருளியது மெய்தானே !

திருவாகிய இறைவன் ஆடிக்கொண்டிருக்கும் துறை - இடமான, சூடு கொண்ட இரு கண்களுமே பார்க்கும்போது அனுபவத்தில் உணரலாம் !

வலது கண் சூரியனாகவும் இடது கண் சந்திரனாகவும் தோன்றி ஒளி ஒன்றாகும்.
இங்கு தவ நிலையையும் கூறியருள்கிறார் அகத்திய மாமுனிவர் :

நம் இரு கண்களையும் சூடு கொள்ள, உணர்வால் சூடு பெருகிட செய்து பார்க்கையில் சூரிய சந்திரனாகிய இரு கண் ஒளி ஒன்றுசேர்ந்துவிடும். அக அனுபவம் கிட்டும் !

வள்ளல்பெருமான், நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து விழித்திருந்து தவம் செய்ய சொல்கிறார் !
மெய் அனுபவம் பெற வேண்டுமாயின் மெய்யிலே விளங்கும் மெய்ப்பொருளைப் பற்ற வேண்டும் !

மெய்ஞ்ஞானம் இது எனவே சித்தரும் முத்தரும் உரைத்ததை அடியேன் எழுதியிருக்கிறேன் !

இது ஒன்றே மெய் !

மெய்யாலுமே இதுவே மெய் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 20 டிசம்பர், 2022

தவம் செய்வோர் தப்புவர்!



சாகாக்கல்வி நூலிலிருந்து : 39

🔥 தவம் செய்வோர் தப்புவர்! 🔥


இரத்தம், எலும்பு, சதை மஜ்ஜையால் ஆன இந்த மெய், தாயின் கருவில் முதலில் தோன்றும் கண்ணால் அதன் ஒளியால் வெதுப்பி வெதுப்பி தோன்றி பிண்ட உற்பத்தி பூரணமாகிறது !

மூன்று மாதத்திற்கு பின் இறையருளால் உயிர் வந்து சேரும் !

உயிரும் உடலும் இணைந்து பூரணமாகி 10 மாதத்தில் 270 நாட்களில் ஜனனமாகிறது !

தாயின் உயிரை சார்ந்து கருவில் இருந்த நாம் திருவின் அருளால் தனித்து விடப்படுகிறோம் இவ்வுலகில் !

ஒன்றும் அறியா குழந்தையாக பிறந்த மனிதன் தான் பிறந்தது பிறப்பிக்கச் செய்தவனோடு ஒன்றிவிடத்தான் என உணர்ந்தால் !? பிழைத்தான் !!

ஒன்றும் அறிவை அறிய அறிவிக்கும் ஆசானை பணிந்து மெய்ப்பொருள் உணர்ந்து ஆன்றவிந்து அடங்கிட தவம் செய்வோர் தப்புவர் !

ஒன்றும், இரண்டிலே, எட்டாகிய இரண்டிலே வழிகண்டு ஊசிமுனை வாசல் வழி கண்டு போனாலே உய்யலாம் ! வாழலாம் ! பேரின்பம் பெறலாம் !

ஒன்றான இறைவனை இரண்டாக உள்ள மெய்ப்பொருளிலே நினைந்து உணர்ந்து நெகிழ்ந்தால் ஜீவாத்மா பரமாத்மா என்ற இரண்டற்று ஒன்றாகலாமே !

ஜீவன் முக்தராகலாமே !

ஒன்றே மெய்ப்பொருள் என இரண்டையும், கண் இரண்டையும் ஒன்றாக்கினால் உள்ளே, ஒளிரும் மூன்றாவது கண் ! துலங்கும் !


ஓங்காரமான அ, உ, ம் - சேர்ந்ததே. மூன்றாமிடம் - முப்பாழ் - லலாடம் - அக்னிகலை - அகக்கண் - ஞானக்கண் நெற்றிக்கண் !


இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

திங்கள், 19 டிசம்பர், 2022

பொன்னம்பலவனை, பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்



சாகாக்கல்வி நூலிலிருந்து : 40

🔥 தங்கஜோதியை கண்டால் ?🔥


நமது மெய் பொய்யல்ல ! அழியாதது ! நித்ய ஜீவனை தாங்கியிருக்கும் மெய் பொய்யா ? மெய் பொய்க்காமல் - அழியாமல் வைக்கும் உபாயம் அறிந்து காத்தால் மெய்தங்கிய மெய்யும் மெய்யாகிவிடும் !

மெய்யிலே இருக்கும் மெய் துணைகொண்டு, காயமே இது பொய்யடா என்றவர்களின் வாக்கை பொய்யாக்கிவிடலாம் ! காயத்துள் நின்ற கடவுளை கண்டால் மெய் மெய்யாகிவிடும் !

மெய்யை உடலை பொன்போல பாதுகாக்க வேண்டும் என்றார் வள்ளலார்.

உடலினுள் துலங்கும் தங்க ஜோதியை கண்டால் நம் உடலும் பொன்னுடலாகுமே ! இது மெய் !

பொன்னம்பலவனை, பொன்னார் மேனியனை நம் மெய்யில் கண்டால் நம் உடலும் பொன்னுடலாகுமே ! இது மெய்யே !

"அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது, கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது!" என்று ஒளவை பிராட்டி அருளிய அமுதமொழி படித்தோமல்லவா ?




அரிதானது மானுடதேகம் ! குறையின்றி பிறப்பது புண்ணிய பலன் ! இறைவன் அருளால் கிடைத்தது !




தந்தவனை, மெய்தந்தவனை, மெய்யினுள் மெய்ப்பொருள் தந்தவனை காணவேண்டாமா ? உணர வேண்டாமா ? நன்றி சொல்ல வேண்டாமா ?




தாய் தந்தை தந்ததல்ல உயிர் ! மெய் !




பூர்வ ஜன்ம கர்மக்கடன் தாய்தந்தை உடன் பிறப்பு சொந்தபந்தங்கள் !!

இதுவே மெய் !




தாயும் தந்தையுமான தயாபரன் சர்வேஸ்வரன் பரப்பிரம்மம் அவனே ஆதியும் அந்தமுமில்லாத அருட்பெருஞ்ஜோதி வானவன் !

மெய் இதுவே !




அவனே நம் உயிருமாகி பெற்றோர் மூலம் உடலும் வர காரணமுமானான் !

மெய் தந்த மெய்ப்பொருள் !!




இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 13 டிசம்பர், 2022

அனைத்துக்கும் மூல ஆதாரமே மெய்ப்பொருள்


சாகாக்கல்வி நூலிலிருந்து : 38

🔥 ஞானிகள் கூற்று ! 🔥


"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்". அவரவர் கையால் அளந்தால் அவரவர் உடம்பு எட்டு சாண் அளவே இருக்கும் ! இதில் தலை ஒரு சாண்.

நம் உடம்புக்கு தலையானது - முக்கியமானது, தலையே - சிரசே !
முக்கியமான - பிரதானமான இடத்தில் தானே தலைநகரத்தில் தானே தலைவர் இருப்பார். தலையில் இருப்பதால் தான் - தலைபோல் இருப்பதால் தான் தலைவர்.
நம் தலைவர் இறைவன் நம் மெய்யில் முக்கியமான, தலையில் இருக்கிறார்.

இறைவன் - பரம்பொருள் நம் உயிராக, பிராணனாக, ஜீவனாக நம் தலையின் உள் மத்தியில் பத்திரமாக இருக்கிறார். பாத்திரமாக நம் மெய் உடல் இறைவனை - நம் உயிரை தாங்கிக் கொண்டிருக்கிறது!

உயிர் தங்கிய சற்பாத்திரம் நம் உடலில் நேத்திரத்தில் துலங்கி நிற்கிறது !

அதுவே மெய் ! அதுவே மெய்ப்பொருள் !

நமது மெய்யில் எழுபத்தீராயிரம் நாடிகள் உள்ளது இது மெய் ! ஞானிகள் கூற்று !

அனைத்தும் தொடர்புடைய இடம் உயிர்ஸ்தானம் ! மெய்ப்பொருள் !

ஏழு ஆதாரம் நமது மெய்யில், அனைத்துக்கும் மூல ஆதாரமே மெய்ப்பொருள் !

பஞ்சபூத கூட்டுறவால் ஆனது இப்பிரபஞ்சமே ! நம் மெய்யும் பஞ்சபூத கூட்டுறவே ! இதுவும் மெய்யே !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

செவ்வாய், 6 டிசம்பர், 2022

மெய் எது ? சத்தியம் உடல்?


சாகாக்கல்வி நூலிலிருந்து : 37

🔥 மெய் எது ? 🔥

மெய் என்றால் உண்மை. சத்தியம். இன்னொரு பொருள் உடல்.

"தமிழ்மொழி தெய்வீகமானது.
அதிவிரைவில் சுத்த சிவானுபூதியை நல்க வல்லது"
என வள்ளல் இராமலிங்கர் பகிர்ந்துள்ளார் !
எப்படி எனில்,,

தமிழ் எழுத்துக்கள் உயிர் எழுத்து மெய்எழுத்து உயிர்மெய் எழுத்து என்றே உள்ளது.
உயிரான இறைவன் உடலான மெய்யில் இணைந்தாலே, உயிர்மெய் கூடி எழுத்தாகி சொல்லாகி பொருளாகிறது !

உயிரோடு கலந்தது தமிழ் என்பதே சரி 
மெய்யிலே உள்ள மெய் உயிரே ! மெய்யாகிய உடலிலே உள்ள சத்தியம் உயிரே ! மெய்யெழுத்து தனித்து இயங்காதே ! உயிர் எழுத்தோடு மெய்யெழுத்தும் சேர்ந்தே இயங்கும்.

உடல் மட்டும் மெய்மட்டும் தனித்தியங்காது. உடலோடு உயிரும் சேர்ந்தாலே இயக்கம் எட்டும் இரண்டும் எழுத்தாகி ஓங்கார சொல்லாகி மெய்ப்பொருளாக விளங்குகிறது !

சொற்சுவை பொருட்சுவை அனைத்தும் கலந்து சுந்தரத்தமிழில் அருட்பாக்கள் எண்ணிலடங்காதவை பாடியருளிய ஞானிகள் தமிழ் மண்ணிலே ஏராளம் ! ஏராளம் !

"தேவர் குறளும் திருநான் மறை முடியும்
மூவர் தமிழும் முனி மொழியும் - கோவை
திருவாசகமும் திருமூலர் சொல்லும்
ஒரு வாசகம் என்று உணர்".

திருக்குறள் நான்கு வேதங்கள் தேவாரம் அகஸ்தியர் முதலான சித்தர்பாடல்கள் திருவாசகம் திருமந்திரம் இவை அனைத்தும் உரைப்பது

ஒரு வாசகம் !

மெய் ! உண்மை ! சத்தியம் !

அது மெய்ப்பொருள் !

ஆக தமிழில் உள்ள எல்லா நூற்களுமே, சங்க இலக்கியமாகட்டும், பக்தி இலக்கியமாகட்டும், இலக்கண நூலாகட்டும், காப்பியங்களாகட்டும், அருட்பாக்களாகட்டும் இவை அனைத்தும் உரைப்பது முடிவில் மெய்ப்பொருளே !

மெய்யிலே விளங்கும் பொருள் கண்மணி ஒளியே மெய்ப்பொருள் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

வியாழன், 1 டிசம்பர், 2022

🔥 மரணமிலா பெருவாழ்வு பெற கண் தான் வழி 🔥


சாகாக்கல்வி நூலிலிருந்து : 36
🔥 கண் தான் வழி 🔥


கண்ணே என மணியே என நம் குழந்தையை கொஞ்சுகிறோம் !
காதலன் காதலியை கண்ணே என்கிறான் !
கணவன் மனைவியர் கண்ணே என்பார்கள் !
பெற்றோர், பெரியோர் பாதம்தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்கிறோம் !

கோவிலில் கற்பூர ஆராதனை முடிந்து தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொள்கின்றோம் !

கண் கண்ட தெய்வம் என பெற்றோரை முதலிலும் கண்ணில் கண்ட தெய்வத்தை குரு அருளால் பின்னரும் கண்டு உய்கிறோம் !

கண் அவனே கணவன் உலகில் பெண்களுக்கு, கணவனே கண் கண்ட தெய்வம் !

ஜீவாத்மாவாகிய பெண்களாகிய மனிதர்களுக்கு பரமாத்மாவாகிய ஆணாகிய பரம்பொருள் நம் கண்ணில் நாம் காணும் தெய்வமாக உள்ளது !

பரம்பொருள் நம் கண்ணில் மெய்ப்பொருளாக உள்ளது !

மெய்ப்பொருள் உபதேசம் தீட்சை பெற்றவரே துவிஜன் ! மீண்டும் பிறந்தவன் !
மெய்ப்பொருள் உணர்ந்து தவம் செய்வோரே பிறவாநிலை பெறுவர் ! இறவாநிலை அடைவர் !
மெய்ப்பொருளை சொல்லி புரியவைத்து உணர வைப்பவரே ஞான சற்குரு 

தவம் செய்து ! சும்மா இருந்து தன்னை உணர்பவரே ஞானி 

மரணமிலா பெருவாழ்வு பெறுவர் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

Popular Posts