வெள்ளி, 25 நவம்பர், 2011

இறைவன் நமக்கு கொடுத்த சீர்?


சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே - நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து.

என வள்ளல் பெருமான் உரைக்கிறார். நேத்திரங்கள் என்றால்
கண்கள். சாத்திரங்களை நாம் உண்மை அறியாது படிப்போமானால்
நமக்கு தடுமாற்றமே உண்டாகும்-புரியாது. ஆனால் கண்களாகிய
சிற்றம்பலத்தில் குடியிருக்கும் இறைவனை அறிந்து
பார்த்தோமானால் கண்கள் நமக்கு அனைத்தையும் அறிவிக்கும்.
எல்லாம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இந்த உலகத்தையும் இது
போன்ற பற்பல உலக நிலையும் நமக்கு உணர்த்தும்,
நாமும் உணரலாம் - ஞானமடயலாம். - பரிபூரண அறிவு பெறலாம்.


இறைவன் நமக்கு கொடுத்த மாபெரும் சீர் - திருமணத்தின் போது
பெண்ணிற்கு என்ன சீர் செய்வீர்கள் என நாம் கேட்கிறோமல்லவா?
அதுதான். ஜீவர்களாகிய நமக்கு ஆண்டவர் கொடுத்த சீர் தான் கண்கள்.

அதை எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அருளால்
உணர்ந்து கொண்ட வள்ளலார் நாமும் அறிந்து கொள்ளவே பாடி
திருவருட்பாவை நமக்கு அருளி இருக்கிறார்கள். என்ன அவர் தம்
கருணை! இரக்கம்.

நான் பெற்ற நெடும்பேற்றை ஓதி முடியாது என போல் இவ்வுலகம்
பெறுதல் வேண்டுவனே என ஆண்டவரிடம் வேண்டிய கருணையின்
வடிவமாயிற்றே அவர்! தான் அறிந்தவற்றை வெளிப்படுத்தி உலகர்
அனைவரும் மரணமில்ல பெருவாழ்வு அடைய வழி காட்டினார்.

திருவருட் பிரகாச வள்ளல் - சற்குரு - ராமலிங்க சுவாமிகள்
திருவடிகளை என்றும் வணங்குவோமாக!

பக்கம் 66

கண்மணிமாலை - சற்குரு சிவசெல்வராஜ்
www.vallalyaar.com




----------------------------------------------------------------------------------------------------------------




தன்னை உணராமல் வாழ்ந்து என்ன பயன்? தன்னை உணர அனைவரும் ஒன்று என தெரியும். குடும்பத்தில் உலகத்தில் பிரச்னை குறையும். குருவை நேரில் சந்தியுங்கள், உபதேசம் பெறுங்கள் தீட்சை பெறுங்கள். தவம் செய்யுங்கள்! குரு/வள்ளலார் அருளுடன் தன்னை உணர தடையாய் இருக்கும் கர்ம வினைகளை அழியுங்கள்.




-அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி

தனி பெருங்கருணை அருட்பெருஞ்சோதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts