திங்கள், 21 நவம்பர், 2011

அகவல் - பிடித்த வரிகள்

உரை மனம் கடந்த ஒரு பெருவெளிமேல்
அரைசு செய்தோங்கும் அருட்பெருஞ்ஜோதி

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே
ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி

சாகாக் கலை நிலை தழைத்திடு வெளியெனும்
ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி

இன்ற நற்றாயினும் இனிய பெருந்தயவு
ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
அத்தக வென்றவென் அருட்பெருஞ் ஜோதி

சித்தி என்பது நிலைசேர்ந்த அநுபவம்
அத்திற லென்றவென்ன அருட்பெருஞ் ஜோதி

கதிர்நல என் இரு கண்களிற் கொடுத்தே
அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ் ஜோதி

நாயினுங் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ் ஜோதி

களங்க நீத்து உலகங் களிப்புற மெய்நெறி
விளங்க என்னுள்ளே விளங்கு மெய்ப்பொருளே

தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கும் ஒரு தனிப் பொருளே

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்ப்
பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே

வீடுகளெல்லாம் விதி நெறி விளங்க
ஆடல் செய்தருளு மரும்பெரும் பொருளே

சத்திய பதமே சத்துவ பதமே
நித்திய பதமே நிற்குண பதமே

பற்றுகள் எல்லாம் பதி நெறி விளங்க
உற்றருள் ஆடல் செய் ஒருதனிப் பொருளே .


யாரே யென்னினு மிரங்குகின் றார்க்குச்
சீரே யளிக்கிஞ் சிதம்பர சிவமே

எம் பொருளாகி எமக் அருள் புரியுஞ்
செம் பொருளாகிய சிவமே சிவமே

அருள்பெறிற் துரும்புமோர் ஐந்தொழில் புரியுந்
தெருளிது எனவே செப்பிய சிவமே

எம்பொரு ளாகி யெமக்கருள் புரியுஞ்

செம்பொரு ளாகிய சிவமே சிவமே

உயிருள்யா மெம்மு ளுயிரிவை யுணர்ந்தே
உயிர்நலம் பரவுகென்று உரைத்தமெய்ச் சிவமே

பொய்ந்நெறி யனைத்தினும் புகுத்தா தெனையருட்
செந்நெறி சொத்திய சிற்சபைச் சிவமே

கொல்ல நெறியே குருவருள் நெறி எனப்
பல்கா லெனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே

உயிரெலாம் பொதுவினுள் உளம்பட நோக்குக
செயிரெலாம் விடுகெனச் செப்பிய சிவமே .

உள்ளகத் அமர்ந்து எனது உயிற் கலந்தருள்
வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே

பிழையெலாம் பொறுத்தெனுட் பிறங்கிய கருணை
மழையெலாம் பொழிந்து வளர் சிவ பதியே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts