வெள்ளி, 11 நவம்பர், 2011

நித்திய கர்ம விதி-2

உணவு முறை :

கிழங்கு வகையில் கருணை கிழங்கு மட்டும் சாப்பிடவும்.
பழம் - பேயன் / ரஸ்தாளி சிறிது கொள்ளுதல் கூடும்.
பழைய கறிகளை(குழம்பு, பிரட்டல், பருப்பு, கீரை) கொள்ளாதிருத்தல் வேண்டும்.
பதார்த்தங்களில் புளி மிளகாய் சிறிதே சேர்க்கவேண்டும்.
மிளகு சீரகம் அதிகமாக சேர்க்க வேண்டும்.
கடுகு சேர்ப்பது அவசியமல்ல.
உப்பு குறைவாக சேர்க்க வேண்டும். தேக நீடிப்புக்கு ஏதுவாம்.
பசுவெண்ணை அல்லது நல்லெண்ணெய் - தாளிக்க பயன்படுத்தலாம்.
வெங்காயம் பூண்டு சிறிது சேர்க்கலாம்.

கத்தரிக்காய், வாழை , அவரை, முருங்கை, பீர்கங்காய்,கலியாண பூசணி,புடல,
தூதுலன் காய், கொத்தவரன்காய் இவைகளை பதார்த்தம் செய்தல் கூடும்.

ஏகதேசத்தில் சிறிது கொள்ள வேண்டியது
வடை அதிரசம் தோசை மோதகம் முதலிய அப்ப வர்க்கங்கள் தினமும் கொள்ளகூடாது
சர்க்கரை பொங்கல், ததியோதனம் , புளிசாதம் .

புளியாரை கீரை தினந்தோறும் கிடைகிணும் நன்று.


cont...



2 கருத்துகள்:

  1. இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம்


    அருளுபவர்: அருள்மிகு பன்னிரண்டாவது பதினெண் சித்தர் பீடாதிபதி,
    குருமகாசன்னிதானம், ஞாலகுரு சித்தர் அரசயோகி கருவூறார் அவர்கள்


    1) இராமலிங்க அடிகளார் தன்னை வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் வந்த ஒருவராகத்தான் அறிமுகப் படுத்திக் கொள்கிறார். அப்படியானால், ஏற்கனவே உள்ள சித்தர்கள், சித்தியாளர்கள், அருளாளர்கள், அருளாளிகள், அருளாடு நாயகங்கள், மருளாளிகள், மருளாளர்கள், மருளாடு நாயகங்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், ... என்று கூறப்படும் அனைவரின் மரபுகளையும் இவர் ஏற்கிறார் என்றுதான் பொருள். ஆனால், இவர் அனைத்து வகையான வழிபாட்டு நிலையங்கள், வழிபாட்டு முறைகள்... முதலிய அனைத்தையும் மறுதலித்து விட்டு தமது விருப்பம் போல் அருட்பெருஞ்சோதி ஆண்டவர் ஒருவரை அறிமுகப் படுத்தி அவரை வழிபாடுமாறு கூறிச் சென்று விட்டார். ஏன் இப்படிச் செய்தார்? தமது புதிய கடவுளையும், வழிபாட்டு முறையையும் பற்றித் தெளிவாக விளக்கங்கள் சொல்லாமலேயே சென்றுவிட்டாரே ஏன்? வெறும் விளக்கு வழிபாடுதான் இவர் சொன்ன சோதி வழிபாடா? அப்படியானால் விளக்கு வழிபடுவது என்பது கற்காலம் தொட்டு அல்லது அனாதி காலம் தொட்டு இருந்து வருகின்ற ஒன்றுதானே! இன்றைக்குக் கூட எல்லாப் பெண்களும், ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி, மனை விளக்கேற்றி, குத்து விளக்கேற்றி வழிபடும் மரபு இருக்கத்தானே செய்கிறது. இப்படி அன்றாடம் வழிபடுபவர்கள் இந்தச் சுடர் சோதி வழிபாட்டின் மூலம் மிகச் சிறந்த பயன் அடைந்ததாக எவருடைய பட்டியலும் இல்லை. எனவே, இது பற்றி யோசிக்க வேண்டியிருக்கிறது. இராமலிங்க அடிகளார் கூறிய சோதி வழிபாடு என்பது ஏதோ மிகப் பெரிய, அரிய நுட்பமான ஒன்று. அதனை அவர் விளக்கிடுவதற்கு முன்னாலேயே சோதியாகிட நேரிட்டு விட்டது. அந்த நிலை ஏன் ஏற்பட்டது? அவர் காலத்தில் அவரைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் நிறைய இருந்தார்களா? அல்லது அவர் பிறர்க்குப் புரிய வைக்க முற்பட வில்லையா? இவை பற்றி யாருமே முறையாகச் சிந்தித்து ஆராயவில்லை.

    2) அருட்பெருஞ்சோதி வழிபாடு என்பது ஐயா அவர்களைப் போலவே ஆடை உடுத்தி, தவவாழ்வு வாழ்ந்து அருட்பாக்களை அல்லும் பகலும் அயராது ஓதிக்கொண்டே இருப்பதுதானா? விளக்கின் சுடரையும், கற்பூரச் சுடரையும் கண்டு கண்டு கண்ணீர் மல்கி களிப்பெய்துவதுதானா? எந்த விதமான தெய்வீக அநுபவம் இதுவரை அருட்பெருஞ்சோதி ஆண்டவரை வழிபட்டவர்களுக்குக் கிட்டியதாகப் பட்டியல் போட்டு விளக்கப் படவில்லை. இராமலிங்க அடிகளாரைப் பின்பற்றி ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பல்லாயிரக் கணக்கான மக்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களில் யாரேனும் ஒருவர் இருவர்களாவது, ஐயாவின் பெயர் விளங்கும் அளவிற்கு வழிபடும் நிலையைப் பெற்று இருக்கிறார்களா? அதாவது தனித்தனிக் கருவறை மூலவர்களாக ஆகியிருக்கிறார்களா? இதுபற்றி ஏதேனும் ஆய்வு இன்றைய நிலையிலாவது துவக்கப் பட்டு இருக்கிறாதா? ஏனெனில் ஐயா அவர்களே "கடை விரித்தோம் கொள்வாரில்லை" என்று தெளிவாக தன்னுடைய முயற்சியைப் பற்றியும், முயற்சியின் மாபெரும் தோல்வியைப் பற்றியும் மிகமிகத் தெளிவாகவும், நேரடியாகவும் கூறிச் சென்று விட்டார். அவர் காலத்திலேயே அவருடைய நேரடி முயற்சியாலும், பயிற்சியாலும் உருவானவர்கள் என்று பட்டியலிட்டுக் காட்ட முடியாத நிலை இன்று வரை இருந்து வருகிறது. இது ஏன்? ஏன்? ஏன்?
    ... ... ...

    பதிலளிநீக்கு
  2. Please read this link. You will get all answer.

    http://sagakalvi.blogspot.com/2011/10/self-realization.html

    பதிலளிநீக்கு

Popular Posts