புதன், 12 டிசம்பர், 2018

திருமூலர் ஞான இரகசியம்

"நோற்று தவம் செய்யார் நூலறியாதவர்
சோற்றுக்கு நின்று சுழல்கின்ற வாறே"
...................பாடல்−1642



இங்கே திருமூலர் ஞான இரகசியத்தையும் கூறுகிறார்!

நமது கண்மணி சுழல்கின்றதல்லவா? நம்  உடலில் உயிர் இருப்பதின் அடையாளம் சக்தி இருப்பதின் அடையாளமே மணியின் சுழலும் தன்மை!

நாம் உண்ணும் ஆகாரம் சக்தியை பெருக்கி சக்தியையூட்டி கண்மணி சுழற்சி இயல்பாக நடக்கிறது!

சோற்றுக்கு நின்று−நாம் உண்ணும் ஆகாரத்தால் நின்று கண்மணி சுழல்கின்றது என்கிறார் திருமூலர்!

கண்மணி உள் அக்னிகலை வரை இருகண் உள்ளேயும் நூல் போல் மெல்லிய நாடி உள்ளது.

தவம் செய்து நோன்பிருப்பவர் அறிவர்!

குருவருளினால் வைராக்கியத்துடன் கண்மணி ஒளியை பெருக்கி உள் நூல் போன்ற−மயிர்பாலம் வழி ஒளி பெருகி ஓடும் நெருப்பாறு பாயும்!

அக்னிகலையை ஆத்மஸ்தானத்தை அடையும்!

இடைப்பட்ட நூல் போன்ற நாடியையே நோன்பு தவம் செய்யாதவர் அறிய
மாட்டார்கள் என்று திருமூலர் கூறுகிறார்!

எவ்வளவு பெரிய ஞான அனுபவம் இரகசியம் இது தெரியுமா?!

புறத்தே செயல்பாடற்றவர்களுக்கு சம்மட்டி அடி!
அகத்தே தவம் செய்பவருக்கு அருளாசி!

ஞானசற்குரு திருசிவ செல்வராஜ் ஐயா..
நூல்:மந்திர மணிமாலை
பக்கம்:132

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts