வள்ளல் பெருமானின் அணுக்கத் தொண்டர் இறுக்கம் இரத்தினசாமி முதலியார் வள்ளலாரின் பாடல்கள் தொகுப்பை வெளியிட திருவருட்பா என வெளியிட 1860 ஆண்டு முதல் ஏழு ஆண்டுகள் போராடினார்!விடவில்லை, தினமும் ஒரு வேளையே உண்டு அறப்போராட்டம் நடத்தி வள்ளலார் மனதை கரைய வைத்து அனுமதி வாங்கிவிட்டார்!
1867 -ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளிவந்த திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் பதிப்பின் முகப்பேட்டில் முதல் முதலாகத் திருவருட்பிரகாச வள்ளலாரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை அவர்கள் திருவாய் மலர்ந்தருளிய "திருவருட்பா"என அச்சிடப்பட்டது . இந்த உலகமே முதலில் நன்றி சொல்ல வேண்டியது இறுக்கம் இரத்தின முதலியாருக்கே !! அவர்தானே ஏழு ஆண்டுகள் விடாமல் நச்சரித்து போராடி அருட்பா வெளியிட வள்ளலார் அனுமதி பெற்றுத் தந்தார்!
இராமலிங்கம் அருளிய பாடல்களுக்கு "திரு அருட்பா" என்றும் ,அதன் பகுதிகளை ஆறாக வகுத்து அவற்றை ஆறு திருமுறை என்றும் ,நமது இராமலிங்க பெருமான்னுக்கு "திருவருட்பிரகாச வள்ளலார்" என்றும் சிறப்பு பட்டம் வழங்கிய பெருமையும் புண்ணியம் உபயகலாநிதிப்பெரும்புலவர் தொழுவூர் வேலாயுத முதலியார் அவர்களையே சாரும்!
1867-ல் திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் முதலில் இறுக்கம் இரத்தின முதலியாரால் வெளியிடப்பட்டது.
1883-ல் திருவருட்பா முதல் நான்கு திருமுறைகள் இரண்டாம் பதிப்பு தொழுவூர் வேலாயுதமுதலியார் வெளியிட்டார்.
1880-ல் திருவருட்பா ஐந்தாம் திருமுறை முதலில் தொழுவூர் வேலாயுத முதலியார் வெளியிட்டார்.
1887-ல் திருவருட்பா ஐந்தாம் திருமுறை இரண்டாம் பதிப்பும் தொழுவூர் வேலாயுதமுதலியாரே வெளியிட்டார்.
திருவருட்பா ஆறாம் திருமுறையை தற்போது வெளியிடவேண்டாம் என வள்ளல்பெருமானே கேட்டுக்கொண்டார்.
திருவருட்பா ஆறாம் திருமுறை முதல் பதிப்பு 1885-ல் வேலூர் பத்மநாபர்
பெங்களூர் இராகவலு ஆகிய இருவர் முயற்சியால் திருச்சி ம. லோகநாதர்
என்பவர் வெளியிட்டார்.
திருவருட்பா மூல ஏடுகளை நன்கு ஆராய்ந்து பிழையின்றிச் செம்மையாகச் சென்னை முன்னாள் இந்து சமய அறநிலைய ஆணையர் ஆ. பாலகிருஷ்ணபிள்ளை 12 புத்தகங்களாக வெளியிட்டார்!
சன்மார்க்க அறிஞர் ஊரன் அடிகள் வரலாற்று முறைப்பதிப்பாக 24-05-1972-ல் ஆறு திருமுறைகளையும் சேர்த்து வெளியிட்டார்.
தற்போது வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம் திருவருட்பா ஆறுதிருமுறைகளையும் இரு பகுதிகளாக மலிவுவிலையில் வெளியிட்டுள்ளனர். உரை நடை பகுதி தனி நூலாகவும் வெளியிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக