ஞாயிறு, 2 அக்டோபர், 2011

உயிரை விட மேலான ஒழுக்கத்தை கடைபிடி

மனிதனின் அறியாமை பிறப்பு -இறப்பு எனும் வாழ்க்கை சக்கரத்தில் சுழல்கிறான்.
இறைவனின் திருவிளையாடல் சம்சார சாகரத்தில் இருந்து மனிதனை கரை ஏற்றுகின்றது.

"உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு"

இப்படி தூங்குவதும் விழிப்பதுமாக இறப்பதும் மீண்டும் பிறப்பதுமாக இருந்தால் இதற்க்கு
என்னதான் முடிவு?

சித்தர் பெருமக்கள் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் என்கின்றனர். தூங்குவது
மரணதிற்கு ஒப்பானது, 


மனிதா தூங்காதே! 
விழி! 
எழு! 
உழை! 
ஓயாது உழைப்பயாக! 
இலட்சியத்தை அடையும் வரை உழை! 
நமது லட்சியம் சாகாமல் இருப்பது.!
உயிர் உடம்பில் வந்து சேர்வதே பிறப்பு.

பிறந்து வாழும் மனிதனின் உடலில் உயிர் நிலை பெற செய்வதே ஞானம்.! 
மரணம் ஏற்படாமல் உடலை விட்டு உயிர் பிரியாமல் எப்போதும் இந்த உடலிலே
இந்த உயிரை நிரந்தரமாக தங்க வைப்பதே ! 


மரணம் இல்லாத பெருவாழ்வு! சாவாத நிலை ! 
செத்தால் தானே உயிர் மீண்டும் பிறக்கும். 
சாவை தவிர்த்தல் இனி பிறப்பை தவிர்க்கலாமே

சாவு என் வருகிறது? அது தெரிந்தால் தடுக்கலாமே! சாவு கட்டாயம் அல்ல. 

வாழ தெரியவில்லைசாகிறான். எப்படி வாழ்வது? 
நமது ஞானிகள் கலையில் எழுந்து இரவு தூங்கும் வரை நாம்
செய்ய வேண்டிய நித்திய கரும விதிகளை சொல்லி வழி காட்டி உள்ளார்கள்.

"ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் "

ஒரு மனிதனனுக்கு மேன்மை தருவது நல் ஒழுக்கமே! நாம் நாம் உயிரை விடவும் மேலான
ஒழுக்கத்தை கருதி கடை பிடிக்க வேண்டும். திருவள்ளுவர் கூறுவது யாதெனின்
ஒருவன் உயிரை விட மேலான ஒழுக்கத்தை கடைபிடி
ப்பானாகில் அந்த உயிரை -இறைவனை
அறியும் நற்பேறு பெறுவான். எல்லாவற்றிலும் ஒழுக்கமே சிறந்தது.

இந்த ஒழுக்கம் உயிர் ஒழுக்கம் உடல் ஒழுக்கம் என இருவகை படும். உடலும் உயிரும்
சம்மந்த பட்டதல்லவா? உடலும் உயிரும் சம்மந்த பட்டே இருக்க ஒழுக்கம் அவசியமாகிறது,
உயிர் ஒழுக்கத்தை வள்ளல்பெருமான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என
விரிவாக தெளிவாக உபதேசித்து உள்ளார்.


உடல் ஒழுக்கம் அதில் கூறப்பட்டுவிட்டது. நல் ஒழுக்கம் எது என்பதை விட தீய ஒழுக்கம்
எல்லாவற்றையும் தவிர் என்றால் சுலபம் அல்லவா? 


உடலை கெடுக்கும் உடலில் இருந்து உயிரை வெளியேற்ற துணை புரியும் பஞ்சமா பாதகங்கள் செய்யாதே! 

பொய், 
கொலை,
களவு, 
கள், 
காமம் 

என்ற இந்த ஐந்தும் நாம் வாழ்வில் வராது கவனமாக மிக மிக 
கவனமாக பார்த்து கொள்ளவேண்டும்.


அறிவை மயக்குபவை, கெடுப்பவை உடலை கெடுப்பவை. மனதை மயக்குவபை எதுவாயினும்
தொடதே. நெருங்காதே! மனதாலும் என்னாதே. இவை கொண்ட தீயவர்களோடு சேராதே.
"துஷ்டனை கண்டால் தூர விலகு"

உணவு உடலுக்கு இன்றியமையாதது. உயிர் வாழ உணவு காற்று நீர் அவசியமல்லவா?
நீரை நன்றாக காய்ச்சி குடிக்க வேண்டும். நாம் இருக்கும் வீட்டை சுற்றி அந்த பகுதிகளில்
நிறைய மரம் நட்டு தூய்மையான காற்று கிடைக்க வழி ஏற்படுத்துங்கள். உணவு சுத்த சைவ
உணவையே உட்கொள்ள வேண்டும்.


கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்

எவ்வுயிரையும் கொள்ளாதவன்! எவ்வுயிருக்கும் தீங்கு நினையாது இருப்பவன்
புலால் உணவு உண்ணாதவன் தான் மனிதன், அவனை இவ்வுலக உயிர்கள் கைகூப்பி
தொழும். எல்லா உயிர்களும் கும்பிட வேண்டாம் குறை சொல்லும்படி நாம் நடக்க வேண்டாமே.

எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒழுகும் உத்தம சீலரே உண்மையான நல்ல ஆன்மீக வாதி.
ஆன்ம நேய ஒருமைப்பாடு உடையவராவர். உயிர் இறைவனல்லவா? எல்லா உயிரும் இறைவன்
தானே! அப்படியானல் எவ்வுயிரும் வணக்கத்திற்கு உரியது தானே!
இந்த உண்மையை உணர்ந்தவன் ஞானி! சித்தன்!


2 கருத்துகள்:

  1. ஹூம்! நல்ல விஷயங்களை படிக்க ஆளே இல்லையோ என்று தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. படிப்பதற்கு ஆட்கள் இருகிறார்கள் ஆனால் அது அவர்களுக்கு சென்று
    அடைவது தாமதம் ஆகிறது.

    சினிமா அரசியல் உணவு கிரிக்கெட் நடிகர் நடிகை எவர்கள் பற்றி
    செய்திகளே அதிகமாக இருப்பதால் மக்கள் அதிலேயே மயங்கி
    விடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு

Popular Posts