அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சத்திய ஞான சபையில் தங்கஜோதி !!
இதுவரை மறைத்துச் சொல்லப்பட்ட ஞானம், பரிபாஷையாக எழுதப்பட்ட ஞானம், குருகுல வாசம் செய்து தான் பெற முடியும் என்றிருந்த ஞானம் மகான் ஸ்ரீ இராமானுஜரைப் போல, வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கரும் உலகமக்கள் அனைவரும் ஞானம்பெற மறைத்ததை வெளிப்படுத்தி, பரிபாஷையை விளக்கி நான் உங்களுக்கு வழி - விழி காட்டுகிறேன் எனக் கூறி சத்தியஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனம் மக்கள் காண, மெய்ஞ்ஞானம் உணர, அறிய வழிவகை செய்தார்கள்! இவ்வுலகில் இதுவரை யாரும் செய்யாத அருஞ்செயல்!
“சத்தியவான் வார்த்தைஇது தான் உரைத்தேன்
கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்ஜோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எல்லாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகம்
தூய்மைஉறும்
நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள்
எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்
செங்கோல் எங்கும் செல்லுகின்ற தாமே.
திருவருட்பா
சத்திய ஞானசபை நம் தலை அமைப்பை ஒத்தது ஆகும்! “சத்திய ஞானசபையை என்னுள் கண்டனன்” என வள்ளலார் பாடியருள்கிறார். அதாவது, நம் தலை நடுவே - உள்ளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தங்கம் போல் தகதகக்கும் ஜோதியாக ஒளிர்கிறார்! இதைத்தான் சத்திய ஞானசபை நடுவே உள்ளே காட்டினார்! அதே சமயம் அதிகாலை கிழக்கு திசையில் சூரியன் உதயமாகும்! மேற்கு திசையில் பூரண சந்திரன் அஸ்தமனமாகும். இதை, இந்த சூரிய ஜோதியை, சந்திர ஜோதியை, சத்திய ஞானசபையின் தங்க ஜோதியை வடலூர் பெருவெளியில் நின்றால் தான்! காண முடியும்! அதாவது ஒரே சமயத்தில் மூன்று ஜோதியை காணலாம்! ஞானத்தை விளக்க இவ்வாறு வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் உருவாக்கினார்.
இதுபோலவே, நம் தலையின் உள் - நடுவே நம் ஆத்மஜோதி - தங்கஜோதி ஒளிவிட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கிறது! நமது வலதுகண் சூரிய ஒளியாகவும், நமது இடதுகண் சந்திர ஒளியாகவும் இருக்கிறது என்பதே ஞானிகள் கூறும் இரகசியமாகும்!
நாம் ஞானம் பெற வேண்டுமாயின், நம் இருகண் ஒளியினால் நம் சிர நடு-உள் விளங்கும் ஆத்ம ஜோதியை அடைய வேண்டும்! அப்போது காணலாம் அருட்பெருஞ்ஜோதியை! - தங்கஜோதியை! - நம் ஆத்மஜோதியை! எவன் ஒருவன் தன் ஆத்ம ஜோதியை காண்கிறானோ அவனே ஞானம் பெற்றவன்! அவன்தான் இறைவனை காண முடியும்! அவன்தான் முக்தி பெறுகிறான்! மோட்சம் அடைகிறான்! மரணமிலா பெருவாழ்வு பெறுவான்! சிரஞ்சீவியாவான்! அவன்தான் ஞானி! அவன்தான் சித்தன்! அவன்தான் சாகாதவன்! என்றும் இருப்பவன்! இறைநிலை பெற்ற பூரணமானவன்.
மகானுபாவர் ஸ்ரீ இராமானுஜர் தன் குரு தனக்கு உபதேசித்த அஷ்டாட்சர மந்திரத்தை, “நீ இதை வெளியில் சொன்னால் நரகத்துக்குத்தான் போவாய்! இது இரகசியம்!” என்றுரைத்ததை மீறி, உலகர் எல்லோரும் சொர்க்கத்துக்கு போகட்டும் என்று எல்லோருக்கும், ஊர் நடுவே கோபுரம் மீது ஏறி உரைத்தாரே அவரல்லவா ஞானி! தான் நரகத்துக்கு போனாலும் பரவாயில்லை என, மூடகுருவின் வார்த்தையை மீறி சொன்னாரே! அவரல்லவா கருணைக்கடல்! அவர் உலகர் மீது கொண்ட அன்புக்கு ஈடேது!!
மந்திரத்தை சொன்ன மகான் ஸ்ரீ இராமானுஜர் கருணைக்கடல் என்றால், இறைவனை அடைய இதுவரை இரகசியமாக சொன்னவற்றை வெளிப்படுத்திய வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கர் யார்? கடவுள் யார்? எப்படியிருக்கிறார்? நம் உடலில் நம் கண்களில் ஒளியாக இருக்கிறார்! நம் சிரநடுஉள் ஆத்மஜோதியாக துலங்குகிறார்! அதுவே சத்திய ஞானசபை விளக்கம்! தைப்பூச ஜோதி தரிசன விளக்கம் என்றுரைத்த வள்ளலார் மனித குலத்தை உய்விக்க வந்த மகா ஞானியல்லவா? இதை உலகம் உணர வேண்டாமா?
பக்தியால் பண்படும் மனிதன் இறைநிலை அறிய, உணர, அடைய வள்ளலார் வழி - விழி காட்டுகிறார்! “பழையன கழிதலும் புதியன புகுதலும்” ஞானம் பெறுவதிலும் வந்தது வள்ளலாரால்!! மனிதன் மனிதனாக வாழ வழிகாட்டுவதே நம் நாட்டில் ஆதியிலிருந்தே வந்துள்ள தர்மநெறியாகும்! அறநெறியாகும்! அப்படி வாழும் மனிதன் தன்னை படைத்த பரம்பொருளை அறிவதே! உணர்வதே! அவன் திருவடியை அடைவதே பூரணமான நிலையாகும்! இதை நம் நாட்டில் காலம் அறியப்படாத பல யுகங்களாக சொல்லி வந்தனர் ஞானிகள் பலர்! இதைத்தான் “சநாதன தர்மம்” என்றனர்!
இதைத்தான் வள்ளலார் ஸ்ரீ இராமலிங்கரும் “சன்மார்க்கம்” என்று பெயரிட்டு உபதேசித்தார்!” வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யானும் ஒருவனன்றோ!” என மிகப் பணிவாக வள்ளலாரே கூறுகிறார்! வள்ளலார் உரைத்த சன்மார்க்க நெறி வேதத்தில் சொல்லப்பட்டதுதான்! 18 புராணங்களிலும் உபநிஷத்துக்களிலும் சொல்லப்பட்டதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் சொன்னதுதான்! இயேசுபிரான் பைபிளில் சொன்ன ஞானம்! முகமது நபிபெருமான் குர்ஆனில் சொன்ன ஞானம்! திருமூலர் திருமந்திரத்தில் சொன்ன ஞானம்! மணிவாசகர் திருவாசகத்தில் சொன்ன ஞானம்! தேவாரம், திருக்குறள், இன்னும் எத்தனையோ மகான்களின் ஞானம்! குணங்குடி மஸ்தான் உரைத்த ஞானம்! தக்கலை ஞானமாமேதை பீர் முகமது உரைத்த ஞானம்! எல்லோர் உரைத்த ஞானமும் சன்மார்க்கமே!
எல்லா மகான்களும் உலகம் உய்வடையவே போதனை செய்தனர்! எவ்வுயிரும் தன்னுயிர் போல கருதவே உபதேசித்தார்கள்! ஒரே இறைவனை! ஒளியாகவே! இறைவனை கண்டு, போற்றி பாடி, உபதேசித்து நமக்கு அருளினார்கள்! இதில் வேற்றுமை காண்பவன் அறிவிலி!
இறைவனை மட்டுமே காணுங்கள்! அவனை அடைய ஞானிகளின் உபதேச வழிகாட்டுதல்களை படியுங்கள்! அறியுங்கள்! உணர வழிதேடுங்கள்! விழியை காட்டும் ஞானகுருவை தேடுங்கள்! கண்டடைவீர்கள்! இரகசியமில்லாமல், பரிபாஷை விளக்கம் கூறி தங்கஜோதி ஞானசபை பல நூற்களை உலகமக்கள் ஞானம் பெற உதவியாக வெளியிட்டுள்ளார்கள்! ஞான சற்குரு சிவசெல்வராஜ், இராமானுஜரை போல இராமலிங்கரைப் போல ஞானத்தை வெளிப்படுத்தி நூற்கள் வெளியிட்டுள்ளார்!
உலகில் முதலாவதாக "கண்மணி மாலை" என்னும் நூல் எழுதி 1992-இல் இரகசியங்களை பரசியமாக்கினார் ஞானசற்குரு சிவசெல்வராஜ்! அடுத்து, "சாகாக் கல்வி" உலகர் அறிய, விரிவாக, விளக்கமாக எவ்வித மறைப்புமின்றி வெளியிட்டுள்ளார் ஞானசற்குரு சிவசெல்வராஜ். பாருங்கள்! படியுங்கள்! ஞானம் பெறலாம்! இன்னும் பல மெய்ஞ்ஞான நூற்கள் உள்ளன!
சன்மார்க்கம் வெறும் அன்னதானத்தோடு நின்றுவிடக் கூடாது! ஞானதானம் செய்ய வேண்டும் எனக் கருதியே, தங்கஜோதி ஞானசபை கன்னியாகுமரியிலிருந்து கடவுளையடைய வழிகாட்டும் விழியின் மகத்துவத்தை உணர்த்தும் மெய்ப்பொருளின் - திருவடியின் திறத்தை விளக்கி - பரிபாஷைகளை விளக்கி ஞானநூற்கள் வெளியிட்டுள்ளனர்! கண்ணுள்ளவர் நோக்கக்கடவர்! காதுள்ளவர்கள் ஞான சற்குரு சிவசெல்வராஜிடம் உபதேசம் கேட்கக்கடவர்! வள்ளலார் இராமலிங்கர் மட்டுமல்லாது எல்லா ஞானிகளின் அருளும் ஆசியும் பரிபூரணமாக கிட்டும்! வந்தால் பெறலாம் ஞான தீட்சையே!
"குருவில்லா வித்தை பாழ்" "குருவருளின்றி திருவருள் கிட்டாது"
அகவல்பாராயணம் செய்தால் மட்டும் போதாது?! சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து நடந்தாலே மோட்சம்! சன்மார்க்க நெறி - பிராணாயாமம் செய்வது அல்ல! வாசியோகம் செய்வதல்ல! வேறு எந்த கிரியையும் யோகமும் செய்வது அல்ல! ஞானநெறியே சன்மார்க்கம்! ஒளியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அடைய ஒளிவழியில் தவம் செய்வதே சன்மார்க்க நெறி! ஒளியை பிடிக்க காற்றை ஊதுபவன் அறிவிலியே! வள்ளலார் எங்கே பிராணாயாமம் செய்ய சொன்னார்? திருவருட்பாவை நன்றாக படியுங்கள்!
உன் ஜீவனை, பிறந்து இறந்து துன்பப்படும் உன் ஜீவனை சற்றேனும் கருணையோடு பார்!? உன் ஜீவனை இரட்சிக்க நீ தவம் செய்ய வேண்டும். ஜீவன் - ஆத்துமா - உயிர் - பிராணன் எங்குள்ளது. நாம் எப்படி அறிவது அடைவது அதற்கு எப்படி தவம் செய்ய வேண்டுமோ அந்தப் படி செய்து உன் ஜீவன் மோட்சம் பெற நடந்துகொள்! இதுவே வள்ளலார் உரைத்த "ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்" என்பதாகும்! சாப்பாடு போடுவது சாதாரண மனிதநேயம்! வள்ளலார் சொன்னது ஆன்மநேயம்!! முதலில் உன் ஆன்மாவை கடைத்தேற்ற நல்ல ஒரு குருவைத் தேடி உன் நடுக்கண்ணை திறந்துகொள்! பின் உலகிலுள்ள எல்லா ஆத்மாக்களும் கடைத்தேற ஞானவழி விழிகாட்டு! ஞானதானம் செய்! இதுவே நீ மோட்சம் பெற வழியாகும்! "ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்!" உலகர் ஆத்மாக்கள் கடைத்தேற நீ வழி - விழி காட்டினால் ஞான தானம் செய்தால் ஞானிகள் மகிழ்ந்து நீ ஞானம் பெற நல்லருள் தருவார்கள்! ஞானதவம் செய்! ஞானதானம் செய்!
வள்ளலாரைப் போல வேஷம் போட்டு திரிய வேண்டாம்! வள்ளலார் சொன்னபடி, ஞானசரியையில் சொன்னபடி திருவருட்பாவில் கூறியபடி ஞானதவம் செய்! உன் உள்ளொளி பெருகிட தவம் செய்! எழுமின்! விழிமின்! இது சுவாமி விவேகானந்தர் கூறியது! பசித்திரு! தனித்திரு! விழித்திரு! இது வள்ளலார் கூறியது!
கண்ணை மூடி தவம் செய்வது ஞானம் பெற வழியில்லை! தகுந்த குரு மூலம் தீட்சை பெற்று கண்ணை திறந்துதான் - விழித்திருந்து தான் ஞான தவம் செய்ய வேண்டும்! "கண்மூடி பழக்கமெல்லாம் மண்மூடி போக" என வள்ளலார் கூறிவிட்டார்! படிக்கவில்லையா நீங்கள்!?
"நடுக்கண் புருவபூட்டு கண்டு களிகொண்டு திறந்துண்டு நடுநாட்டு!" வள்ளலார் உரைத்த ஞானம் இதுதான்! எல்லா ஞானிகள் கூற்றும் இதுவே! ஏனைய கோவில் திருவிழா போலல்ல தைப்பூச திருவிழா! ஞானம் பெற வழிகாட்டும் அற்புத திருவிழா! இங்கே வந்து வீணே காலத்தை கழிக்காதீர்! ஞானம் பெற வழி தேடுங்கள்! கிட்டும்!
சன்மார்க்க சங்கத்தவரே, தைப்பூச விழா கொண்டாடும் நீவீர், வைகாசி - 11, தர்மச் சாலை விழா கொண்டாடும் நீவீர், புரட்டாசி சித்திரை - குருபூஜை என கொண்டாடாமல் விட்டது ஏனோ?! இதற்கு கூட ஞானம் இல்லையே!? அன்னதானம் போடு என சொல்ல ஒரு ஞானி வரவேண்டியதில்லை! ஆத்மஞானம் பெறவே, வழிகாட்டவே, விழிகாட்டவே வள்ளலார் வந்தார்!! புரிகிறதா!
சாகாதவரே சன்மார்க்கி!
சாகா நிலைபெற்ற ஒளியுடன் பெற்ற ஒப்பற்ற ஞானியே நம் வள்ளலார்
சாகாக்கல்வி உரைத்த மகானுபாவர் அருள்வள்ளலே நம் வள்ளலார்
வள்ளலார் பெயர் சொல்லவே நாம் முற்பிறவியில் புண்ணியம் செய்திருக்க வேண்டும்
எல்லோரும் பெறலாம் ஞானம்!
கன்னியாகுமரி தங்கஜோதி ஞான சபை,
வடலூர் சத்திய ஞானசபையின் ஜோதி தரிசனத்தை விளக்கி,
திருவடியான் உங்கள் கண்களை திறந்திட வழிகாட்டும்!
உலகிலேயே ஒரே மெய்ஞ்ஞான இணையதளம்
உலகம் முழுவதும் சன்மார்க்க நெறியை பரப்பி வருகிறது! யாரும் பார்க்கலாம்!
உன்னுள்ளே இருக்குது உலகம்!!
"ஞான தானம் செய்வீர்!"
"ஞான தவம் செய்வீர்!"
"வள்ளலார் பிறந்தநாளை குருபூஜை என புரட்டாசி சித்திரையில் கொண்டாடுக!"
"மரணமிலா பெருவாழ்வு வாழலாம்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக