வெள்ளி, 9 ஜனவரி, 2026

ஆத்ம சாதகர்கள் செய்ய வேண்டியது ஒரே பூசை -அகஸ்தியர்



*அகஸ்தியர் பரிபூரணம் 1200 *

"பூசையென்ன சிவபூசை சத்திபூசை பூரணமாய் வாலையுட
பூசைமைந்தா நேசமுடன் வாலையவள் வாசமானால்
நிசமான மவுனமடா நிலைக்கும் பாரு


பக்தியுடன் பூசை புனஸ்காரங்கள் செய்தால் அந்தந்த தேவதைகள் அருள் கிட்டும். சிவபூசை சக்தி பூசை இப்படி பூசைகள் பல!

ஆனால் ஆத்ம சாதகர்கள் செய்ய வேண்டியது ஒரே பூசை ! அதுதான் வாலை பூசை! எல்லா சித்தர்களும் வழிபடும் ஒரே தெய்வம் வாலை! வாலையின் மகத்துவத்தை உணர்ந்ததால் தான் சித்தர்கள் வாலையை பணிகின்றனர். இவ்வுலகிலுள்ள எல்லா சித்தர்களும் இன்றும் சூட்சும தேகத்தோடு கன்னியாகுமரி வாலையை பணிய வந்து போகிறார்கள்! வாலையை வணங்குவதே எமக்கு வேலை! வாலை குடியிருக்கும் நம் முச்சுடர் முச்சந்தியிலே கண்டு பணிவதே நம் பிறவிப் பயனாகும் ! கண்டால் பணிந்தால் வாலை நம்மில் வாசமானால் வசமானால் அருள்மழை பொழிவாள் அமுத மழை அருள்வாள்! அதுவே கிடைத்தற்கரிய பெரும்பேறு! புண்ணியம்! மவுனமான கண்ணில் மணியில் ஒளியில் மனதை நிலை நிறுத்தி சும்மா இருந்தால்! அப்படியே தியானம் தொடர்ந்தால், நிசமான மவுனமடா உனக்குள் நிலைக்கும் பாரு! இதுதான் உண்மை! உணர்ந்தாயானால் எல்லா சித்துக்களும் கிட்டும்! மேலான பரகதியும் பெறுவாய்! பேரின்பம் !


நூல் -ஞானம்பெற விழி
பக்கம் - 11

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts