சனி, 3 ஜனவரி, 2026

அகஸ்திய மகரிஷி திருவடி கண்டேன் என்கிறார்


"பார்வையினாற் கயிறு கொண்டு கட்டு கட்டு"
செழியான சின்மயத்தின் சொரூபந்தன்னைத் தெரிசித்தேன் நாதலிங்க மூர்த்தி பாதம்
விழியான பொருள் தானே மனதிற் கொண்டு
கற்பூர தீபவொளி காட்சி கண்டேன்
அரகரா உச்சி முடி அகரந்தானே "


நம் தவம் மேலோங்க, பார்வையால் பார்த்து நீயும் படுமுடுச்சு போடடா " என்கிறார் சித்தர் பெருமக்கள் !! நீ பார்த்தால் வெளியே உன் முன்னால் உள்ளது தெரியும் ? பார்வையாகிய கயிற்றால் கட்டினால் உன்னால் வெளியே பார்க்க முடியாதே ! 

அப்போது பார்வை உள்ளே தான் போயாக வேண்டும் ! அகநோக்கம் வேண்டும் ! எப்படி பார்வையை வெளியே கட்டினால் அது உள்ளே தான் போகும் ! 
எவ்வளவு சூட்சமமாக சொல்லியிருக்கிறார் பாருங்கள் ! 

செழுமையான தவத்தால் நம் கண்கள் சிவந்து செங்கண்ணாகும் அது ஒளியேறி செழியான என்றது ! சின்மயம் - கண் ! தவம் செய்து நான் முதலில் தரிசித்தது என் கண்ணைத்தான் ! சின்மயம் ! கண்ணைத்தான் சின்மயம் - பரிபூரணம் மெய்ப்பொருள் திருவடி என பலவாக கூறினர் பரிபாஷையாகவே ! தெரிசித்தது எதை நாதலிங்க மூர்த்தி பாதம்! நாதமயமான லிங்கமூர்த்தி - ஒளிவடிவம் பாதம் திருவடி - கண்! 

அதாவது தவம் செய்து முதலில் பார்ப்பது நம் கண்ணையே ! எப்படி தவம் செய்வது ? "விழியான பொருள் தானே மனதிற்கொண்டு "நம் விழியிலே - அதுதான் நம் மெய்யிலே உள்ள பொருள் அதிலே மனதை கொண்டு ! விழியிலே மனதை வைத்தால் காணலாம் விழிகளையே ! 

முடிவில் கற்பூர ஜோதியும் காணலாம் ! முடிவில் எல்லாம்வல்ல பரம்பொருளை உச்சியிலே 'அ ' காரத்திலே தான் கண்டேன் ! அ வாகிய கண்ணாலே தான் எட்டாலே தான் கண்டேன் என்கிறார் அகஸ்திய மகரிஷி !




நூள் - ஞானம் பெற விழி
பக்கம் 123
குருவே சரணம்

அகத்தியர் மெய்ஞான சூத்திரம் - திருவடி



அகத்தியர் மெய்ஞான சூத்திரம்

"கண்ணில் நின்ற ஒளிபாரு வெளியைப் பாரு
காலடங்கி யாடுகின்ற கருவைப்பாரு
விண்ணில் நின்று பொருள்சொன்ன குருவைப் போற்று "

வெளிப்படையாகவே கூறிவிட்டார் அகத்தியர் ! கண்ணில் நின்ற ஒளிபாரு! இதுவே ஞான தவம்! 

கண் ஒளியை பார்த்து பார்த்து உணர்ந்து உணர்ந்து 
கண்மணி நடுவே ஊசி முனை வாசல் வழி உட்புகுந்து உள்ளே வெட்ட வெளியைப்பாரு! 
நீ உள்முகமாய் உணர்வோடு சும்மா இருக்கும் போது வெளியே கண் இரண்டும் அடங்கிப் போகும் ! 

இரு கண்ணும் உள்ளே உள்ள உன் கருவாம் - உன் உயிரைப் பார்த்து அதோடு லயிக்கும் ! 
இதை விண்ணில் நின்று , எல்லாமே வெட்டவெளி தான் என உணர்ந்து அங்கிருந்து 
உபதேசம் தீட்சை செய்த குருவை போற்று! 

உன் ஞான சற்குருவை எப்போதும் போற்றி பணிந்து தொண்டு செய் ! 

"குருவினடி பணிந்து கூடுவதல்லாங்கு அருவமாய் நிற்கும் சிவம் " என்கிறது ஒளவைக் குறள்! 

குரு நமக்கு அவர் உயிரை கொடுத்தல்லவா நம் உயிரை நமக்கு உணர்த்துகிறார்?! 
நமக்கு இரண்டாவது பிறப்பு தரும் குருவை வணங்காமல் இருப்பது கொடும் பாவமல்லவா? 
குருவைப் பணி! குரு பார்க்க கோடி வினை தீரும்!

நம் மனம் ஒருங்கினால் நாதவிந்து சொரூபம் காணலாம்! 
பஞ்சபூதங்களாலான நம் இரு கண் தான் 
நம் மனம் உதிக்கும் இடம் ஒடுக்கும் இடம்! 

சாதாரண மனிதருக்கு கண் பார்த்து மனம் எண்ணம் உதயத்தால் கர்மவினை நடக்கும் ! 
ஆத்ம சாதகன் எங்கே உதயமாகிறதோ? அங்கேயே கண்ணில் - பார்ப்பதால் உருவாகும் மனதை அதே கண் ஒளியில் வைப்பதால் நினைப்பதால் ஒடுக்கி விடலாம்! மனம் அடங்கும் ஒரே இடம் நம் கண்ணே ! 

" மனமடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்" என்றார் ஒரு ஞானி! 

நம் கண்ணில் தான் ஜீவ ஒளி - பரமாத்மாவின் அம்சமான பேரொளி நிறு ஒளியாக துலங்குகிறது. இறைவன் இருக்கும் துலங்கும் இறைவன் திருவடிகளில் நம் மனதை வைத்தால் மட்டுமே இறைவன் திருவடியில் மட்டும் நம் மனம் அடங்கும் ஒருங்கும் !? வேறு எங்கும் யாராலும் அடக்கவோ ஒடுக்கவோ முடியவே முடியாது!!

அக்கினி ஆதித்தன் சந்திரன் கலந்து ஒன்றாய் நின்றதுவே பூரணமாம்! அதுவே வாலையாம்! இதை அறிபவனே புண்ணியவானாம்! இதை சொல்பவனே ஞானசற்குருவாம்! நம் சிரசே ஆயிரத்தெட்டிதழ் தாமரையாம்! அதிலிருந்து உள் பாய்வதே அமுதமாம்! அமுதம் உண்டவன் சாகமாட்டான்! அவனே சிவயோகி ! ஞானி ! சீவனை சிவனாக்கிய சித்தன்!


நூல் - ஞானம் பெற விழி
பக்கம் - 140
குருவே சரணம்

சஞ்சித கர்மம் எப்படி தீரும்?


நினைந்துருகும் அடியாரை நைய வைத்தார்
நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
நனைந்தனைய திருவடி யென் தலைமேல் வைத்தார் "



நினைந்து நினைந்து 
உணர்ந்து உணர்ந்து 
நெகிழ்ந்து நெகிழ்ந்து 
அன்பே நிறைந்து நிறைந்து 
ஊற்றெழும் கண்ணீரதனால் உடம்பு நனைய 
ஞான தவம் செய்யும் அடியாரை நைய வைத்தார்! நைய புடைத்து வாட்டி எடுப்பார். 

நையாத மனிதர்க்கு உய்யாது கண்டு கொள்ளும் என்றே நந்தனார் 
சரித்திரக் கீர்த்தனை உரைக்கிறது! 

நம் சஞ்சித கர்மம் உட்பட எல்லா கர்மமும் பின் எப்படி தீரும்! 
சிலருக்கு கையில் திருவோடும் கிட்டும் தெருவோடும் போவார் ! 
நம்மை நைய புடைத்தாலும் கைவிட மாட்டான் கடவுள்! 
நம் நம்பிக்கையின் ஆழம் பரிசோதிப்பான் ! 

உயிரே போவதாக இருந்தாலும் அவனை திருவடியை விடக் கூடாது !!
சிக்கெனப்பிடிக்க வேண்டும்! காப்பான்? அருள்வான்! கடவுள்! 
எல்லா மும்மல வினைகளையும் நீக்கி அரவணைத்துக் காப்பார்! 

நனைந்த திருவடி - நினைத்து நினைத்து தவம் செய்தால் கண்ணீரால் 
நிரம்பிய நனைந்த திருவடி - நம் கண் குளம் போல் எப்போதும் 
தள தளத்துக் கொண்டேயிருக்கும் ! இதுவே ஆத்ம சாதகன் தோற்றம்!


நூல் - ழூவர் உணர்ந்த முக்கண்
பக்கம் - 145
குருவே சரணம்

Popular Posts