திங்கள், 6 அக்டோபர், 2025

🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥



🔥 திருவெண்பா - திருவாசகம் 🔥


"வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்
பொய்யும் பொடியாகாது என்செய்கேன் - செய்ய
திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ
மருவா திருந்தேன் மனத்து"



இறைவன் திருவடித் தாமரையாகிய நம்கண்களில் மணியில் உணர்வோடு தவம் செய்து உள்ளொளி பெருகினால் கொடிய வினையிரண்டும் அந்த தீயால் வெந்து அகன்றுவிடும் !
அப்படியானால் வினையிரண்டும் கண்மணி அருகில்தானே முன்னே உள்ளது ?!

இதுதான் ஞான இரகசியம் !
அந்த தீயில் என் மெய்யுருகி - உடலும் உருகிவிடும் !
ஆனால் பொய்யான உடல் தீயில் போட்டால் எரிந்து சாம்பலாகி விடும் !

இங்கே மெய்யுருகி பெருகும் தீயால் - சுத்த உஷ்ணத்தால் ஊனுருகி எலும்பும் உருகி கரைந்து நம் ஒவ்வொரு நாடி நரம்பும் ஒளிமயமாகி ஒளிருமேயல்லாமல் ஒளியால் எரிந்து சாம்பலாகாது !

இதுவே ஞான இரகசியம் !

சாதாரண தீ அனைத்தையும் பஸ்பமாக்கிவிடும்,
இறைவனாகிய பேரொளி நம்மை ஒளிமயமக்கிவிடும் ! இறைவனாகவே மாற்றிவிடும் !

நாம் செய்யவேண்டியது என்னவெனில் இறைவன் ஒளியாகி திகழும் பெரிய துறையாகிய இரு கண்மணியில் நம் மனதை வைத்து உணர்ந்து நெகிழ்ந்து சும்மா இருக்க வேண்டும் இதுவே ஞானதவம் ! செய்தால் இறைவன் காட்சி கிட்டும் உள்ளே போகலாம் அமுதம் சாப்பிடலாம் ! பேரின்பம் பெறலாம். முக்தியடையலாம் ! அந்த ஒப்பற்ற தேனமுது தரும் இறைவனை மனதால் தழுவாமல் சேராமல் இருந்து விட்டேனே என்கிறார் !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts