வெள்ளி, 10 அக்டோபர், 2025

🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥



🔥திருவாசகம் - நீத்தல் விண்ணப்பம்🔥

"அழுமடி யாரிடை யார்த்துவைத்
தாட்கொண் டருளியென்னைக்
கழுமணி யேயின்னுங் காட்டு"

ஞான விளக்கம் :

மாணிக்கவாசகர் ஒவ்வொரு பாடலிலும் தெளிவாக கூறுகிறார் !
அடியார் என்பவர் அழுபவரே!

"அழுதால் பெறலாம் உன்னை” என்று அதனால்தான் பாடி அருளினார் !
அப்படிப்பட்ட மெய்ம்மையார், அழும் அடியார்களோடு என்னை சேர்த்து வைத்து ஆட்கொண்டு அருளினாய் !

அழும் அடியார்களே ஞானதவம் செய்து இறைவனை அடைவர் !

அழுது அழுது கண்ணீரால் என் மணியை கழுவி நன்றாக கழுவி என் அழுக்கையெல்லாம் - மும்மல அழுக்கையெல்லாம் நான் போக்க வேண்டும் இறைவா அருள்புரி !

பக்தியில் கோவிலில் சிவனுக்கு நன்னீரால் கங்கையால் அபிஷேகம் !

ஞானத்தில் உடலில் கண்ணாக சிவனுக்கு கண்ணீரால் அபிஷேகம் ! கண்ணீரால் சிவனை கழுவி கழுவி நம் பாவ வினைகளை நீக்கி நாம் பரிசுத்தமாவோம் !

நம் பாவம் கரைய கரைய உள்ளிருக்கும் பரமன் அருள் கொஞ்சங் கொஞ்சமாக பெருகும் !

அழு ! நன்றாக அழு ! மணியை கழுவு !

இறைவன் திருவடிகளே நம் கண்கள் !

- ஞானசற்குரு சிவசெல்வராஜ் அய்யா

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts