வியாழன், 4 ஜூலை, 2019

முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது

"முத்தொளி மரகதமே முழங்கொளி முகில் வண்ணா! "

                                    பாடல்−2041

நம் கண்மணி ஒளியை எண்ணி தியானம் செய்தால் முத்துப்போன்ற வெள்ளை ஒளியும் பின்னர் மரகதம் போன்ற பச்சை ஒளியும் காணலாம்! யாரால்? நம் கண்ணில் மணியில் கார்முகில் வண்ணனான ஒளியால் காணலாம்!
            இதேயனுபவத்தை எங்கள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையிலே சமாதி கொண்டருளும் ஞானக்கடல் பீர்முகமது அப்பா அவர்களும் தமது ஞானப்புகழ்ச்சியிலே 4−வது பாடலாக அருளுகிறார்!?

"முத்தொடு பவளம் பச்சை முதலொளி புவனும் கூட்டி சத்தியாய்ச் சிவனாயிந்தத் தாரணி தன்னிலாக்கிப் பத்தியாயெனை வளர்த்த பரமனே"

           என எவ்வளவு அருமையாக ஞான அனுபவ நிலையை பாடிவிட்டார்?! முஸ்லீம் ஞானியும் திருமங்கை யாழ்வாரும் பாடியது ஒரே மெய்யனுபவ நிலைதான்!

            ஞானத்து−கடவுளையடைய தடையே நாம் கொண்ட மதம்தான்− ஆணவம் எனும் மதமே! யானைக்குத்தான் மதம் பிடிக்கும்! பிடித்தால் அனைத்தும் துவம்சம்தான்! நமக்கு மதம் வேண்டாமே? நாம் மனிதர்கள்! ஒரே கடவுளின் குழந்தைகள்!! இதுதான் சன்மார்க்கம்! சகலரும் சேர்ந்து வாழ்வதே!


 பரமபதம்
ஞானசற்குரு சிவசெல்வராஜ்

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts