வெள்ளி, 31 மே, 2019

சும்மா இருக்கும் சுகம்

"இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லது மற் றென்றுவரு மோஅறியேன் எங்கோவே - துன்று மல வெம்மாயை யற்று வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகம் "

துன்றுமல வெம் மாயை யற்று - கொடியமும் மலங்களான ஆணவமலம், கர்ம மலம் இதைவிட அதிக துன்பம் தரும் மகா மாயை மலம் ஆகியன இல்லாமலாகி வெளிக்குள் வெளி கடந்து - நம் கண்மணி உள்ளே அகண்ட பரவெளி உள்ளது. அதுவே உன் வெளி! அந்த உள் வெளிக்குள் வெளி கடந்து! " சும்மா இருக்கும் சுகம் " _ நம் மும்மலங்கள் இல்லாமலாகி நம் கண்மணி ஊசிமுனை துவாரத்தின் உள்ளே உள்ள பரவெளியின் எல்லையை, உள்வெளி கடந்து போக வேண்டுமானால் " சும்மா இருக்கும் சுகம் " தெரிந்திருக்க வேண்டும்.



சும்மா இருந்தாலே- சுகம் பேரின்பம் கிடைக்கும்! நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம்!? அது அதன் இயல்பான தன்மையில் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் போதும்i!


நீங்கள் ஏதாவது செய்தால் ஏதாவது பலன் கிட்டும்! உங்கள்செயல் - வினை - அதற்கு தகுந்த பாவ புண்ணியத்தை கொடுக்கும் ! ஏற்கனவே இருக்கின்ற வினையோடு இந்த வினையும் சேர்ந்து கொள்ளும்! கர்ம வினைகளை தீர்க்கின்றேன் என்று ஏதோ ஒரு சாதனை செய்து அறியாமல், புரியாமல் மீண்டும் மீண்டும் வினைகளை சேர்த்துக் கொள்கிறான் மனிதன்.


அதற்குதான் ஞானிகள், எதையாவது செய்தால் ஏதாவது வினை வந்திடும் அல்லவா? ஒன்றும் செய்யாமல் " சும்மா இரு" என்கிறார்கள்! சும்மா இருப்பது எப்படி? என்பதையே திருவருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் திருவருட்பாவின் மூலம் நமக்கு விளக்கி அருளியுள்ளார்கள்! இந்த சும்மா இருக்கும் திறனை உபதேசித்து தீட்சை வழங்குவதே மிகப் பெரிய ஞான நிலையாகும்!


இப்பணியில்தான் அடியேன் தொண்டாற்றுகிறேன்! வாருங்கள் சும்மா இருக்க ! வந்தால்! இன்றே கிட்டும்! நாளை வந்தால் நாளைக்கே கிட்டும்! நாளை, நாளை என நாட்களை கடத்தாதீர்! இப்படி ஒருவாய்ப்பு உங்கள் வாழ்வில் இனி என்று வருமோ?


ஞானசற்குரு
சிவ செல்வராஜ் ஐயா,
திருவருட் பிரகாச வள்ளலார் அருளிய "திருவருட்பாமாலை " நூலில் பக்கம் எண் 13
www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts