வியாழன், 9 மே, 2019

உஞ்சைவிருத்தி

“நிரந்தர மாக நினையும் அடியார்
இரந்துண்டு தன்கழல் எட்டச்செய் தானே"

                        பாடல் - 1888

சதா சர்வ காலமும் இறைவனையே நினைந்து நினைந்து தவம் செய்யும் மெய்யடியார்கள் சாப்பாட்டைப் பற்றி சிந்திக்கவே மாட்டார்கள்!

ஒரு ஜாண் வயிற்றை நிரப்ப ஆகாரம் தேடி அதற்காக சம்பாதிக்க போகமாட்டார்கள்!

தேவையெனில் பிச்சை எடுப்பர்! அது நான் என்னும் ஆணவத்தை விட்டொழிக்கும்!

உண்மையான சன்னியாசியின் இலட்சணமே "உஞ்சைவிருத்தி” தான்! அதாவது பசித்தால் புசிக்க பிச்சை எடுத்து உண்பான் அவனே உண்மையான சந்நியாசி!

"இருக்கும் இடம் தேடி என் பசிக்கு உருக்கமுடன் உணவு கொண்டு வந்தால் உண்பேன் அல்லது உண்ணேன்" என பட்டினத்தார் கூறினார்.

பட்டினத்தார் சீடர் பத்திரகிரியார் பிச்சையெடுத்து குருவுக்கு கொடுத்து மீந்ததை தான் சாப்பிட்டு மோட்சம் பெற்றார்!

அந்த பரமனே பிரம்ம கபாலத்திலே பிச்சையெடுத்துத்தான் உண்டார்!

அந்த பரமன் போட்ட பிச்சைதானே நம் உயிர்! மறக்கலாமா?

ஆணவம் அழிய வேண்டுமானால் நீயும் பிச்சையெடு! உயிர்பிச்சை போட்டவனை 
அப்போதுதான் உணர முடியும்!


ஆன்மீகச் செம்மல் ஞானசற்குரு திரு சிவ செல்வராஜ் அய்யா

நூல் : மந்திர மணி மாலை

பக்கம் : 158

குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts