வியாழன், 30 மே, 2019

ஆறறிவு பெற்றதுதான் கோளாறோ?

"உம்பரால் அறியலாகா ஒளியுளார் ஆனைக்காகிச் செம்புலால் உண்டுவாழும் முதலைமேல் சீறிவந்தார்"

தேவர்களாலும் அறிய முடியாதவன் அருட்பெருஞ்ஜோதி! ஆண்டவன்! பரந்தாமன்!
பாற்கடல்வாசன்!

அந்த கருணைக்கடல், நதிக்கரையில் முதலை வாயில் அகப்பட்ட ஆனைக்காக,ஆதிமூலமே என்று ஶ்ரீமந்நாராயணரை கூவி அழைத்த கஜேந்திரனுக்காக ஓடோடி வந்து முதலையை சக்கராயுதத்தால் கொன்று இரட்சித்தானே!!

அந்த கருட வாகனனை கண்டு களிக்கும் நாள் எந்நாளோ?!

ஶ்ரீரங்கத்தின் அருகே திருவானைக்கா எனும் அப்புஸ்தலமான சிவ ஷேத்திரத்தில்,தினமும் காவிரி நீர் எடுத்து சிவனுக்கு துதிக்கையால் அபிஷேகம் செய்த ஆனைக்கு மோட்சம் அருளினான் சிவபெருமான்! அத்தலமே திரு ஆனைக்காவல் என்றாயிற்று! 

ஓரறிவு முதல் ஐயறிவுவரை எல்லா ஜீவராசிகளுமே இறையருள் பெற்றிருக்க, ஆறறிவு பெற்ற நாம் இறையருள் பெற வேண்டாமா? ஆறறிவு பெற்றதுதான் கோளாறோ?

விதண்டா வாதம் புரியவும்,முட்டாள் தனமாக பேசுவதும், எல்லாம் தெரிந்தவன் போல் நடப்பதும் தான் ஆறறிவு இல்லாத இந்த மனித குலத்தின் மிகப்பெரிய பண்பு! முட்டாள்கள்!!

நாலாயிர திவ்ய பிரபந்தம் எழுதி வருகிறேன். குருவாயூர் குட்டி கிருஷ்ணன் கோயில் அரவணை பாயாசமும் அமுத பஞ்சாரையும் அன்பர் ஒருவர் கொண்டு வந்தார்! சாரதா ஆஸ்ரமத்திலிருந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் முற்றோதல் நடக்கிறது வாருங்கள் என அழைப்பு வந்தது! ஶ்ரீமத் நாராயணன் அருள் கிட்டுகிறது!    நாராயணா! நாராயணா!

பரமபதம்
  பாடல்−899
ஞானசற்குரு சிவசெல்வராஜ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts