வியாழன், 16 ஆகஸ்ட், 2018

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!

உடல் பற்றின்றி உயிரை பற்றியே பரம்பொருளை அடைந்துவிடலாம்!
விட்டதடி ஆசை புளியம் பழத்தோட்டோடு என்பர்! நாம் உடலை வெறுக்க வேண்டாம்!

*உயிரை - உயிரொளியை ஓங்கச் செய்தாலே போதும்!*
*உடல் பக்குவமாகிவிடும்!*
இது புரியாத யோகிகள் உடலை அலட்சியபடுத்தி கெடுத்துக் கொள்வர்.
*இது மாபெறும் தவறு!*

பட்டினி கிடந்து உடலை வருத்தி கடுமையான யோகம் செய்வர்!

தவறு!

*உடலை புண்ணாக்காதீர்!*. உயிரை போற்றுங்கள்!

இன்னும் சிலர் உடல் மிக முக்கியம் எனக் கருதி காய சித்திக்காக கல்பங்கள் மூலிகை சாப்பிடுவர் இது அதைவிட முட்டாள்தனம்!

*வெறும் உடலை வைத்து என்ன செய்ய!*

*இதில் சூட்சுமம் என்னவென்றால், நீங்கள் உயிரை வளர்த்தால் போதும் உடல் பக்குவமாகிவிடும்!*

"உடம்பினை வளர்க்கும் உபயம் அறிந்து உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே"

- திருமூலர்

உயிரை வளர்ப்பதே உடம்பினை வளர்க்கும் உபாயம்!
அ - உ - வில் ஒளியை பெருகச் செய்வதே அந்த உபாயம்!
இதுவே மதியாகும்!
*ஞான சற்குரு சிவ செல்வராஜ் ஐயா*
நூல் : திரு மணி வாசக மாலை
பக்கம் : 107
குருவின் திருவடி சரணம்

www.vallalyaar.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts