வள்ளல் யார் எனும் ஆராய்ச்சி செய்ய நம் பெருமான் பலகாலம் இருந்த இடமே சித்தி வளாகம்.
சனாதனதர்ம நெறி தழைத்தோங்க சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திற்கு கொடி அமைத்தார்.
அதன் விளக்கமும் ஞான அனுபவம் என்று உரைநடை பகுதியில் தெளிவாக குறிப்பிட்டு அன்பர்களுக்கு வழிகாட்டினார்.
இன்றும் தைப்பூச ஜோதிதரிசனம் கண்ட மூன்றாம் நாள் நம் வள்ளல் பெருமான் திருக் காப்பிட்டுக் கொண்டு, ஒளியாகி கரைந்த வெளியிலே கலந்த, திருஅறை தரிசனம் காணலாம். சித்தி வளாகத்திலே சித்தியெலாம் பெற்றனன் என பெருமானார் குறிப்பிடுகிறார்.
சித்தி வளாகத்தில் அன்பர்களை கூட்டி சன்மார்க்க சங்கம் நடத்திய நம் பெருமான் நமக்கு கொடுத்த உபதேசம் என்ன தெரியுமா? தனித்திரு என்பது தான்! சாதுக்கள் சங்கத்தில் இரு என்ற வள்ளலார் தனித்திரு என்றே உபதேசித்தார்.
நான் ஆன்மா - சீவன் என்கிற தனி நிலையில் இருக்க வேண்டும். எப்போதுமே தன்னையறிந்து இன்பமுற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் என்ற ஆவா மிகுதியால் சத்விசாரம் செய்து கொண்டே தனித்திருக்க வேண்டும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக