சென்னை - திருவெற்றியூர் இரத வீதியிலே ஒரு நிர்வாண சந்நியாசி
அமர்ந்திருந்து அவ்வழியே வருவோர் போவோரையெல்லாம் நாய் போகிறது
நரி போகிறது பண்ணி போகிறது பாம்பு போகிறது என கூறிக்கொண்டு இருந்தார்
இராமலிங்கர் அவ்வழியே வந்தபோது இதோ ஓர் உத்தமமான 'மனிதன்' வருகிறான் என்றார். அவரவர் குணத்தை வைத்து மக்களை அழைத்துக் கொண்டிருந்த திகம்பர சாமியார் இராமலிங்கரை மனிதன் - உத்தமமான மனிதர் என்றார்.
மனிதனாக பிறந்து மிருகங்களாக வாழும் மாக்கள் மத்தியில் இராமலிங்கர் மனிதனாக வலம்வந்தார்.
மனதை இதம் பண்ண தெரிந்தவர், மனம் போன போக்கிலே போகாமல் மனதை இறைவன்பால் செலுத்தி பக்குவப்படுத்தியவர்.
மனம் போன போக்கிலே போக வேண்டாம் என்ற மூதுரைக்கொப்ப வாழ்ந்தவர்
இராமலிங்கர். 'மனம் அடங்கும் ஓர் இடந்தனில் இருந்தும் அறியேன்' என்ற ஞானக் கூற்றுப்படி மனம் அடங்கும் இடத்தில் இருந்தவர் இராமலிங்கர்.
1823 அக்டோபர் 5ம் நாளில் பிறந்த இந்த மனிதன் 51 வயது வரை
பூதவுடலை ஒளியுடலாக்கி இப்பூவுலகில் வாழ்ந்தார். நம்மை போலவே
இராமலிங்கரும் ஒரு தாய் வயிற்றில் பிறந்த சாதாரண மனிதனே!
சதா சர்வ காலமும் இறைவனை எண்ணி மோன நிலை கூடி வாழந்தார்.
மாயையான இவ்வுலகு நம் மனதில் பற்றாமல் பற்றற்று வாழ்ந்தார்.
மனதை இறைவன் திருவடியில் ஒருமைப்படுத்தியதால் அறிவு
பிரகாசமானது! ஓதாதே உணர்ந்தார்.
வள்ளல் யார்?
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக