ஒத்த இடத்தில் இருந்து தூங்காமல் தூங்கி மோன
நிலையில் ஆன்ம பசியோடு இறைவன் திருவடியிலே
மட்டுமே மனதை இருத்தி விழி மலர்களை மலர்த்தி
விழித்திருந்து தவம் செய்தார், பலன் மனிதனான இராமலிங்கர்
புனிதன் ஆனார். தன்னுள் இருக்கும் அது தான் எங்கும் நிறைத்த
எல்லாம் வல்ல இறைவன் அம்சம் என்பதை உணர்ந்தார்.
தன்னை போலவே எல்லோர் உள்ளிலும் அதுதான் என்பதையும்
உணர்ந்தார். அதுதான் அண்டம் பகிரண்டம் எலாம் நிறைந்து எனவும்
கண்டார்.
தான் அதுவாக மாறிவிட்டார்! தனக்கு கிடைத்த சத்து சித்தாக மிளிரக்கண்டார்!
அதனால் கிடைத்த ஆனந்தம் அளவிலாதது என உணர்ந்தார்.
அதை அறிந்ததால் தான் உணர்ந்ததால் அதுவாக மாறியதால் அதன் இயல்பை
பெற்றார் இராமலிங்க வள்ளலார்! ஆம் ராமலிங்கர் வள்ளலாரானார்!
எவ்வுயிரும் தானாக கண்டார். பயிர் வாடிய வாட்டம் அவர் பெற்றார்.
அறியாமையில் உழல்கின்ற உயிர்களை கண்டு மனம் வெதும்பினார்.
தீச்செயல் புரியும் மனிதர்களைக்கண்டு உளம் புதைத்தார். ஆணவத்தால்
அடாது செயும் மனிதர்களைக் கண்டு பயந்தார். பிற உயிர் படும் துன்பம்
அவர் பட்டார். அதுதான் ஒருமை.
ஆன்மநேய ஒருமை. வள்ளல் தன்மையை பெற்றவர் தன்மை இதுவே.
குறைந்த பட்சம் பசியாவது நீக்குவதே மனித இயல்வு என்றார்.
உணவால் மனித உயிர் வாழும் பின் தேறிவிடும் என்றுரைத்தார்.
அதன்பின் வள்ளல் யார் என்ற ஆராய்ச்சியில் இறங்குவார் என்றார்.
வள்ளலாகிய இறைவன் யார்? யார்? என்று இறைஞ்சுபவன்
ஏழைக்கு இரங்குவான். கருணையே உருவாவான்.
வள்ளல் யார்?
ஞான சற்குரு சிவசெல்வராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக