ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

சனாதன தர்மம் - வள்ளல் பெருமான் உரைத்த சன்மார்க்கம்.


பரமாத்மா சீவாத்மாவாகி நம் கண்மணி ஒளியில் இரு
நிலைகளாக உள்ளது!

அந்த இரண்டையும் ஒன்று சேர்ப்பதே தவம்.

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து
அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீராதனால் உடம்பு
நனைந்து
- இப்படி செய்ய வேண்டும் என்கிறார் வள்ளலார்.
கண்களை நினைத்து கண்மணியின் உள் ஒளியை நினைத்து உணர்ந்து
உணர்ந்து அதிலேயே நினைவை நிறுத்தி நிறுத்தி பழக பழக
நெகிழ்ச்சி உண்டாகும், நெகிழ்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதுவே
கருணையாக மலரும். கண்மணி ஒளியில் மனதை நிறுத்தும் போது
கடுப்பு உண்டாகும் கனல் பெருகும் கண்ணீர் தாரை தாரையாக கொட்டும்.
இப்படியே தொடர்ந்து தவம் செய்ய செய்ய கண்மணி ஒளி பெருகும்.
கொஞ்சங் கொஞ்சமாக உடல் முழுவதும் பரவும் ஊன உடலே விரைவில்
ஒளிவுடல் ஆகும்,

இதுவே உன்னதானமான தவம். சீவனை சிவமாக்கும் ஒப்பற்ற கலை.
இந்த கலையை உலக மக்கள் அனைவரும் பயிலவேண்டும். பேரொளியாகிய
பரமாத்மாவாகிய இறைவன் சிற்றொளியாகிய - சீவான்மாவாகிய நாம் அடைய
இது ஒன்றே வழி!

எல்லோருக்கும் பொதுவான - மனிதன் மனிதனாக வாழ்ந்து இறையோடு கலக்க  வழி காட்டி கூட்டி செல்வதே சனாதன தர்மம். அதுதான் வள்ளல் பெருமான் உரைத்த  சன்மார்க்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Popular Posts