புதன், 9 மார்ச், 2016

வாசியோகம்


வாசியும் ஊசியும் பேசி வகையினால்
பேசியிருந்து பிதற்றிப் பயனில்லை
ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
ஈசன் இருந்த இடம் எளிதாமே.

வாசி வாசி என்று பேசி பயன் இல்லை! ஊசிமுனை என
தலை உச்சியியை பற்றி பற்பல யோகம் எதுவும் பிரயோஜனம் இல்லை!
அதைப்பற்றி பேசி பிதற்றி திரிகிறார்கள்! அதனால் ஒரு பயனும் இல்லை
என்று திருமூலர் திட்டவட்டமாக கூறுகிறார்! ஆசை கண்டதெல்லாம்
வேணுமென்ற ஆசை! அன்பு பாசம் பந்தம் என்று சொந்த பந்தங்களை
வீடு மனை தோட்டம் சொத்து சுங்கங்களை கட்டிஅழுதல் இதை எல்லாம் விட்டுவெளியே வா! உலகத்தை துச்சமாக கருதியிரு! புற உலக வாழ்வை
துறந்தவனே அகத்தில் ஈசன் இருப்பதை உணர முடியும்!

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு என்று சாமியார் சொல்கிறார்!! மடத்தனமான உபதேசம் இது! எல்லா ஆசையையும் விடு என்பதேபுத்தர் உபதேசம்! எல்லா ஞானிகளின் உபதேசம் இதுதான்! இதுவரை இவ்வுலகில் தோன்றிய ஞானிகள் யாரும் ஆசிரமம் கட்டவில்லை! பல நூறு ஏக்கர் சொத்து சேர்க்க வில்லை!
மக்களுக்காக வாழ்ந்தார்கள்! மக்களை ஞான பாதையில் கூட்டி
சென்றார் கள்! அவர்கள் தான் மெய்ஞானிகள்! இப்போதுள்ள சாமியார்கள்
100 ஏக்கரில் ஆசிரமம் ஆடம்பர சாமியார்கள் கோடியில் புரளும்
குட்டி ராஜாக்கள்! சொல்வது யோகம் மட்டுமே! ஞானம் இப்போது உள்ள
சாமியார்கள் யாருக்கும் தெரியாது!  எப்படி நாடு உருப்படும்! யாரிடம் சொல்ல?

குடி குடியை கெடுக்கும். புகைப்பதால் பபுற்றுநோய் வரும்.போதைப்பழக்கத்தால் கெட்டுப்போவாய் என உபதேசம் பண்ணும் அரசாங்கமே அனைத்தையும் விற்பனை செய்கிறது?! மூவாசை விட்டொழி என்றும் இறைவனை அடைய தூய நல்லொழுக்கத்தை கடைபிடி - சுத்த சைவ உணவை உட்கொள் என போதிக்க வேண்டிய சாமியார்கள்! மண்ணாசையால் ஏக்கர் கணக்கில் ஆசிரமம் பொன்னாசையால் கோடி கோடியான பணம், பெண்ணாசையால் தவறான செயல்பாடுகள்,நீ எப்படி வேண்டுமானாலும் இரு என்ஆசிரமத்தில் சேர்ந்தால் போதும்  என்கிறார்கள்!

நீ மாமிசம் மீன் முட்டை சாப்பிடலாம் யோகா மட்டும் செய் என ஆசிரமத்தில்
கூட்டம் சேர ஆட்டம் போடுகிறார்கள்! அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி! அரசாங்கம் போதையை வியாபாரம் செய்கிறது. சாமியார்கள் மேலும் பல வழியில் கெட காரணமாகிறார்கள்!போலிச்சாமியார்கள் ஒழிய வேண்டும்! நல்ல ஆன்மீக பெரியோர்கள் ஆட்சிக்கு வரவேண்டும்!

மக்கள் நல்வாழ்வு வாழ நன்னெறி நடக்க இறைவா நீதான் அருள் புரிய வேண்டும்! இந்த நாட்டை நீ தான் காப்பாற்ற வேண்டும்!

1 கருத்து:

Popular Posts