தவம் கண்ணை திறந்து கொண்டு தான் செய்ய
வேண்டும்.அரை கண்ணாவது திறக்கணும். முழு கண்ணையும் திறந்தால் "பௌர்ணமி திருஷ்டி " என்று பெயர். அரை கண் திறக்கும் போது "பிரதம திருஷ்டி" என்று
பெயர். கண்ணை முழுமையாக மூடினால் "அமாவாசை திருஷ்டி " என்று பெயர்.
தவம் செய்யும் போது முதலில் கண்ணை மூடி குருவை வணங்கி விட்டு "பௌர்ணமி திருஷ்டி "க்கு வர வேண்டும். பௌர்ணமி திருஷ்டியில் இருந்து கண்மணி உணர்வை
பெருக்கி கொண்டு பிரதம திருஷ்டிக்கு வந்து அப்படியே
எவ்வளவு நேரம்
வேண்டும் என்றாலும் இருக்காலாம். பிரதம திருஷ்டியிலயே எவ்வளவு நேரம்
வேண்டுமானாலும் இருக்கலாம் என்று சொல்லாமல் சொல்லி உணர்த்தினவர் தான்
தட்சிணாமூர்த்தி.
சும்மா இரு என்பது இது தான்.
இவ்வாறு சும்மா
இருப்பது மட்டும் தவமல்ல. இது போன்று நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும்
ஒவ்வொன்றும் தவமாக வேண்டும்.
நீதியாக நெறியாக
ஒழுக்கமாக
பண்போடு
பக்தியோடு
அன்போடு
பணிவோடு
தெளிவோடு
நிதானமாக
ஒவ்வொரு செயலிலும்
பார்த்து பார்த்து
செயல்பட வேண்டும்.
அப்போது தான் தவம் விரைவில் கைகூடும். தவம் மட்டும் 1
மணி நேரம் செய்தால் போதாது? 24 மணி நேரமும் நம் ஒவ்வொரு சொல்லும் செயலும்
தவத்தை பிரிதிபலிப்பதாய் விளங்க வேண்டும்.
அப்படி பட்டவனே ஆன்ம சாதகன்.
-ஞான சற்குரு திரு சிவசெல்வராஜ் அய்யா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக